Asianet News TamilAsianet News Tamil

உங்க மனைவி செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியா இருக்காங்களா? இந்த 7 அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பா சிக்கல் தான்!!

Relationship Tips : செக்ஸ் வாழ்க்கையில் உங்களுடைய துணை திருப்தியாக உணரவில்லை என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகளை இங்கு விளக்கமாக காண்போம். 

relationship tips 7 signs that your partner not satisfied sexually in tamil mks
Author
First Published Aug 9, 2024, 6:30 PM IST | Last Updated Aug 9, 2024, 6:30 PM IST

தாம்பத்தியத்தில் கணவன் மனைவி காதல், காமம் தளும்ப வாழ்வது தான் சிறந்தது. ஒருவேளை இருவரில் ஒருவர் மனம், உடலால் ஒன்றிணையாவிட்டால் கூட அது இன்பமான இல்லற வாழ்க்கையை அமையவிடாது. ஒருவேளை உங்களின் மனைவிக்கு உடலுறவு  கொள்ளும்போது திருப்தியாக இல்லையெனில் அதை சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். 

செக்ஸ் என்பது அவசியமில்லாதது போன்று தொடர்ந்து தள்ளி வைத்தால் உங்கள் மேல் ஈடுபாடு இல்லையென்று அர்த்தம். நீங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்வது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை அல்லது அவர்கள் முழுமையான திருப்தியாகவில்லை. இதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: இந்த மாதிரி உங்க உறவு இருந்தால் கெஞ்சுவதற்கு பதிலாக விலகி செல்லுங்கள்!!

நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் துணையுடன் கூடும்போது அவர்கள் வேறு எண்ணங்களில் மூழ்கினாலும், உங்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தாலும் அவர்கள் திருப்தி ஆகவில்லை என்பதே மறைமுக அர்த்தம்.  உங்களுடைய துணை உங்கள் அருகாமை நேரத்தை தவிர்த்தால் உங்கள் மீது ஈடுபாடு இல்லையென்பதை குறிக்கிறது. தனிமையில் இருவரும் இருப்பதை விரும்பி ஏற்று கொள்ளாமல் விலகி ஓடினால் உங்கள் மனைவி அல்லது கணவன் உடலுறவில் திருப்தியாக இல்லை. 

உங்கள் துணை இரவில் அல்லது பகலில் செக்ஸ் வைத்த பிறகு கூட எந்த மாற்றமும், இன்பமும் இன்றி எப்போதும் போல இருந்தால் தாம்பத்திய உறவின் மீது திருப்தி இல்லை என்பதே உண்மை. செக்ஸ் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், உடலுறவுக்கு பின் உங்களுடைய மனைவி தனிமையாக இருக்க ஆசைப்பட்டால் அவர் திருப்தியாக இல்லை என்பது நிறுவப்பட்ட உண்மை. நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் உங்களுடைய துணை விலகியே இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் திருப்தியில்லை. 

இதையும் படிங்க:  திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!

செக்ஸ் வைத்து கொள்ள அவர் எதும் முயற்சி எடுக்காமல் எப்போதும் நீங்களே முயற்சி செய்தால் அவருக்கு விருப்பம் இல்லை என புரிந்து கொள்ளவேண்டும். உடலுறவுக்கு நேரம் ஒதுக்காமலும், உங்களுடன் நேரம் செலவிடாமலும் இருந்தால் அவருக்கு உடலுறவில் திருப்தியில்லை. 

இது மாதிரியான ஏதேனும் ஒரு விஷயத்தை உங்களுடைய துணை உங்களுக்கு செய்தால் அவருடன் பேசி அவர் மனதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் இருவருக்கு இடையே இருக்கும் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்து காதலிலும், காமத்திலும் திளைத்திருங்கள். வாழ்க்கை இனிதாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios