இந்த மாதிரி உங்க உறவு இருந்தால் கெஞ்சுவதற்கு பதிலாக விலகி செல்லுங்கள்!!
Signs To End Your Relationship : நீங்கள் உங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் நடக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக நீங்கள் அந்த உறவை முறித்துக் கொள்வது மேலானது ஏன் தெரியுமா?
இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவானது விலை மதிப்பு பெற்றதாகிவிட்டது. பொதுவாக, ஒரு உறவை பராமரிக்க நிறைய முயற்சிகள் அவசியம். மற்றபடி உறவு எப்போது முடியும் என்று சொல்லவே முடியாது.
ஒருவேளை உங்களது உறவில் அன்பும் நம்பிக்கையும் இல்லை என்றால், இது சிறிய கேள்வியை நீங்கள் கேளுங்கள். அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றால், அந்த உறவை முறித்துக் கொள்வது ரொம்பவே நல்லது.
மரியாதை: எந்த ஒரு உறவுக்கும் அதன் சொந்த மதிப்பு உண்டு. அதாவது, உங்கள் உறவில் பரஸ்பரம் மதிப்பு ரொம்பவே முக்கியம். ஒருவேளை உங்கள் துணை உங்களை மதிக்கவில்லை என்றால், உங்கள் துணையிடம் மதிக்கும்படி கேளுங்கள். மீறியும் அவர் உங்களை மதிக்கவில்லை என்றால், உங்களது உறவு சரியாக இல்லை என்று அர்த்தம். எனவே, அத்தகைய உறவில் நீங்கள் மதிப்பை எதிர்பார்ப்பது ரொம்வே கடினம்.
விசுவாசம்: உடறவில் விசுவாசம் மிகவும் அவசியம். ஒருவேளை உங்களது துணை உங்களுக்கு நேர்மையாக அல்லது விசுவாசமாக இல்லாமல் இருந்தால் விசுவாசமாக இருக்கும்படி கேளுங்கள், இல்லையெனில், உறவை முடித்துக் கொண்டு செல்வது நல்லது.
கவனம்: என் மீது கவனம் செலுத்துமாறு நீங்கள் உங்கள் துணையிடம் கேட்டால், அது உங்கள் உறவில் பலவீனத்தை காட்டுகிறது. ஒருவேளை உங்களது துணை உங்கள் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால், அவருக்கு உங்கள் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். இது குறித்து உங்கள் துணையிடம் ஒரு முறை பேசுங்கள். மதிக்கவில்லை என்றால், உறவை முறித்துக் கொள்வதுதான் சரி.
இதையும் படிங்க: கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
நேரம்: எந்த ஒரு உறவின் தொடக்கத்திலும் பலர் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள் மற்றும் அவர்களுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள். அது வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி. ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் துணையிடம் தனக்காக நேரத்தை ஒதுக்குமாறு கெஞ்சுவதை பதிலாக, உங்கள் மதிப்பை நீங்கள் புரிந்து கொண்டு அந்த உறவை முறித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த மணப்பெண்!
அர்ப்பணிப்பு: உறவில் இருவருக்கும் இடையே அர்ப்பணிப்பு உறுதியாக இருந்தால் அந்த உறவு செழிக்கும். ஒருவேளை உங்களது துணை அதிலிருந்து பின் வாங்கினால், இல்லையெனில், விரும்பவில்லை என்றால், அவர் உங்களது உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். எனவே, அத்தகைய நபருடன் உறவே தொடர வேண்டாம்.