ஆண் நினைத்தால் தாய் , மகள் இருவருடனும் உறவு வைக்கலாம், பெண்களை அடிமைப்படுத்த கேவலமா ரூல்ஸ் போட்ட ஐஎஸ்ஐஎஸ்
பெண் அடிமைகளுக்கு உரிமையாளராக இருப்பவர், அடிமைப்படுத்தப்பட்ட தாய், மகள் இருவருடனும் உடலுறவு கொள்ளலாம் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு விதிகளை வெளியிட்டுள்ளது.
மதங்களின் பெயரால் அரங்கேறும் வன்முறைகளும், அடிமைத்தனங்களும் ஒவ்வொரு நாடுகளிலும் ஏதேனும் மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சலனமின்றி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். சில இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாத அரசின் கொடூரத்தை முழு உலகமும் அறிந்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டில், ஐஎஸ்ஐஎஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில் அடிமையாக நடத்தப்படும் பெண்கள் குறித்து சில விதிகள் குறிப்பிடப்படிருந்தன. இந்த அறிக்கை பெண்களின் அடிமைத்தனத்தை நியாயப்படுத்த பல பாயிண்டுகளை அடுக்கியிருந்தது. சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை குறிவைத்து அமெரிக்க சிறப்புப் படைகள் தாக்குதல் நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இந்த அடிமை சாசன விதிகள் அம்பலமாகின.
அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்களுடன் அடிமை பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டமும் கிடைத்து. அதில் பெண்களை அடிமைப்படுத்துவதை தர்க்கரீதியாக நியாயப்படுத்த விதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. உரிமையாளர் தங்களுடைய அடிமைப் பெண்களுடன் எந்த வகையான உறவைக் கொண்டிருக்க முடியும், எப்படி உறவு கொள்ள முடியும் என்பது பற்றிய பல விதிகள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 15 விதிகளை அந்த ஆவணம் விளக்கியுள்ளது.
- அடிமைப் பெண்ணுக்கு மாதவிடாய் வரும் வரை அவளின் உரிமையாளர் அவளுடன் எவ்வித உடலுறவும் கொள்ளக்கூடாது.
- ஒரு அடிமைப் பெண் கருத்தரித்தால், அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை உரிமையாளர் அவளுடன் உடலுறவு கொள்ளக் கூடாது. அவளுடைய கருவை கலைக்கும் உரிமை உரிமையாளருக்கு இல்லை.
- ஒரு பெண் அடிமை, அவளுடைய எஜமானரால் விடுவிக்கப்பட்டால், அவளுடன் உடலுறவு கொள்ளவே முடியாது.
- ஒருவர் இருசகோதரிகளை அடிமைப்படுத்தினால், அவர்களுடன் உறவு (Relationshop) வைத்திருக்க முடியாது. அவர் அதில் ஒருவரை கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- எஜமான் தன் அடிமையை கர்ப்பமாக்கினால், அவன் அவளை யாருக்கும் விற்க முடியாது.
- இரண்டு ஆண்கள் பணம் கொடுத்து ஒரு பெண்ணை வாங்கினால், அவளுடன் யாரும் உறவில் ஈடுபட முடியாது.
- தந்தையும், மகனும் ஒரே அடிமைப் பெண்ணுடன் உறவுகொள்ள முடியாது. ஆனால் தாய்-மகள் அடிமைகளைப் பொறுத்தவரை அப்படியல்ல, அவர்களின் உரிமையாளர்கள் இருவருடனும் உடலுறவு கொள்ளலாம்.
- அடிமைப் பெண்ணிடம் எஜமான் அத்துமீறி தவறாக நடந்து கொள்ளக்கூடாது. அவரால் செய்ய முடியாத வேலை கட்டாயப்படுத்திக் கொடுக்கக் கூடாது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்லாம் மதத்திற்கும் தொடர்பு இல்லை என கூறப்படுகிறது. இந்த அமைப்பினர் அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் இஸ்லாமிய சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என எகிப்து நாட்டின் அல் அசார் பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் பத்தாஹ் அலவாரி குற்றஞ்சாட்டுகிறார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த விதிகளை கொண்டு பெண்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்த முயல்வதாக மட்டும் சொல்லிவிட முடியாது. அடிமைப் பெண்களை கரிசனமாக நடத்துவதாக வெளிக்காட்ட நினைக்கிறார்கள். ஆனால் இந்த அடிமை முறையினால் எத்தனையோ பெண்கள் தங்கள் சுயம் தொலைத்து நரக வேதனை அடைகிறார்கள் என்பதே உண்மை.
இதையும் படிங்க: "பழக பழக அவர் வயசை மறந்திட்டேன்"முதியவர் மீது காதல் பித்து கொண்டு திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!
இதையும் படிங்க: 'முதலில் காதலை சொன்னது மருமகள் தான்' சொந்த மகனின் மனைவியை திருமணம் செய்து வாழும் முதியவர்!