விறுவிறுவென வீரியமான உயிரணுக்களை பெற கண்டதை சாப்பிடாதீங்க! இவைகளை சாப்பிடுங்க போதும்!

ஆண்மை குறைபாடு ,உயிரணு குறைபாடு அல்லது உயிரணுக்களின் குறைந்த தரம் போன்ற பிரச்சனைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இம்மாதிரியான பிரச்சனைகளை இயற்கையாகவே சரி செய்வதற்கு என்னென்ன உணவுகளை தஎடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

Food those increase sperm count Naturally

இன்றைய இயந்திர உலகத்தில் ஆண்கள், பெண்கள் என்று பலரும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலையில் உள்ளதால் அவசரம் அவசரமாக சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர். இப்படி சாப்பிடுவதால் உடலிற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கூட எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு சாப்பிடுவதனால் பல்வேறு உடல் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதிக உடல் எடை, சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை, இரத்த அழுத்த பிரச்சனை என்று பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதனை தவிர குறிப்பாக பெண்களுக்கு கருப்பை சம்மந்தமான பிரச்னை, ஆண்களுக்கு உயிரணுக்கள் சம்மந்தமான பிரச்னைகளும் அதிகளவில் இருப்பதால் ஒவ்வொரு தெருவிலும் மகப்பேறு மருத்துவமனைகளை நாம் சாலையில் செல்லும் போது பார்க்கிறோம்.
 

ஆண்மை குறைபாடு ,உயிரணு குறைபாடு அல்லது உயிரணுக்களின் குறைந்த தரம் போன்ற பிரச்சனைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இம்மாதிரியான பிரச்சனைகளை இயற்கையாகவே சரி செய்வதற்கு என்னென்ன உணவுகளை தஎடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். 

உயிரணு எண்ணிக்கை குறைவதற்கு காரணம் :

கீழ்காணும் காரணிகளால் ஆண்களுக்கு உயிரணு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பலவீனமான நரம்பு மண்டலம்,
மரபு ரீதி,
சமீபத்தில் உண்டான நோய், 
மது அருந்துவதால்,
புகை பிடிப்பதால்
போன்ற பல்வேறு காரணங்களால் விந்து முந்துதல்,, உயிரணுக்கள் குறைவு, வீரியம் குறைந்த உயிரணுக்கள், விறைப்பின்மை போன்ற ஆண்மை குறைவு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகின்றன.

காற்றை சுத்திகரிக்கும் இந்த செடிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா?

உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:

பூண்டு மற்றும் வெங்காயம்:
 

பூண்டு மற்றும் வெங்காயத்தில் காணப்படும் அல்லிசின் என்ற வேதிப்பொருள் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து , உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. தவிர இதனை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தால் வெகு நேரம் விரைப்புத் தன்மையுடன் செயல்பட வைக்கும் என்பதில் மாற்றமில்லை.பெருக்கியாகவும் மற்றும் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலில் முக்கியமானது.

வால்நட்:

விந்தணுக்களுக்கு உயிரணு சவ்வு உற்பத்தி செய்ய ஆரோக்கியமான கொழுப்பு தேவைப்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உயிரணுக்களின் அளவை அதிகரிக்க செய்கின்றன.
வால்நட்டில் இருக்கும் அர்ஜினைன் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.தவிர இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு:

பாதாம் பருப்பில் அதிகளவிலான நார்ச்சத்து ,சிங்க், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.இவை ஆண்மையை அதிகரிக்க செய்து நீண்ட நேர உடலுறவிற்கு உதவுகிறது. அன்றாடம் பாதாம் பருப்பு எடுத்து வந்தால் உயிரணு எண்ணிக்கையும், உயிரணுவின் தரமும் அதிகரிக்க செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வேர்க்கடலை :

வேர்க்கடலையில் இருக்கும் அதிகப்படியான ஜிங்க் விந்தணுக்களின் எண்ணிக்கையின் தரத்தை அதிகரிக்க செய்கிறது.

முட்டை :

உயிரணு எண்ணிக்கையை அதிகரிக்க முட்டையில் இருக்கும் ஜிங்க் , ப்ரோட்டீன் மற்றும் வைட்டமின் முக்கியமானது. இதனை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி மற்றும் அதன் தரத்தையும் மேம்படுத்தலாம்.

கீரை :

கீரையில் நிறைந்து காணப்படும் ஃபோலிக் அமிலம் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தக்காளி பழம் :

தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் என்ற வேதிப் பொருள் விந்து அணுக்களின்தரத்தையும், எண்ணிக்கையும் அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதுளை:

மாதுளையில் இருக்கும் அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலிருக்கும் அணுக்களை தூண்டும் பணியை சிறப்பாய் செய்கிறது. தவிர இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் விந்து கெட்டியாகும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் ஏ, பி 1 அண்ட் சி ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய துணை புரிகிறது.

ஆரஞ்சு பழம் :

ஆரஞ்சு பழத்தில் காணப்படும் வைட்டமின் சி விந்தணுக்களின் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

உணவே மருந்து,மருந்தே உணவு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த உணவுகளை உங்களது உணவு பட்டியலில் சரிவிகிதத்தில் சேர்த்து உயிரணு உற்பத்தியை இயற்கையாகவே அதிகரித்துக் கொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios