விருத்தசேதனம் செய்தால்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் காதலி.. புலம்பும் காதலன்!

sex Life : விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் தன்னுடைய காதலி தன்னை விருத்தசேதனம் செய்ய வற்புறுத்திகிறாள் என்று புலம்பும் காதலனுக்கு நிபுணர் சொன்ன பதில் இங்கே..

does circumcision really affect sex life here is the expert answer in tamil mks

தனக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் தன்னுடைய காதலி தன்னை விருத்தசேதனம் செய்ய வற்புறுத்திகிறாள் என்று புலம்பும் காதலனுக்கு நிபுணர் என்ன பதில் சொல்கிறார் என்று இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

கேள்வி: நான் 28 வயதுடைய ஆண். தற்போது நானும் என் காதலியும் திருமணம் செய்து கொள்ள போகிறோம். ஆனால், என் காதலி என்னை விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். விருத்தசேதனம் செய்யப்படாத ஆணுடன் உடலுறவு வைத்து கொள்வது ஆரோக்கியமற்றது என்று அவள் நம்புகிறாள். இது உண்மை இல்லை என்று பலமுறை நான் அவளிடம் சொல்ல முயற்சித்தேன். ஆனால் அவள் அதை ஏற்க தயாராக இல்லை.

இதையும் படிங்க:  செக்ஸ் வேண்டாம்னு தவிர்ப்பதால் எவ்ளோ ஆபத்துக்கள் வரும் தெரியுமா? 

அதுமட்டுமின்றி, எனக்கு விருத்தசேதனம் செய்ய விருப்பமில்லை. ஏனென்றால், இதனால் நான் எதிர்காலத்தில் வருத்தப்பட விரும்பவில்லை. விருத்தசேதத்திற்கு பிறகு உணர்வு மற்றும் பாலினம் குறைக்கிறது. மேலும் இப்படி செய்தால்,  முழு செயல்முறை மிகவும் வேதனையானது என்று நான் படித்திருக்கிறேன். ஆகையால், நான் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா? இதற்கு எதிராக என் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது? கொஞ்சம் என்னை தெளிவு படுத்துங்கள்.

இதையும் படிங்க:  திருமணமாகியும் பாலியல் ஆசை இல்லை.. ஓரினச்சேர்க்கையாளராக இருப்பேனோ.. புலம்பும் ஆண்!!

நிபுணர் பதில்: முதலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை தீர்மானியுங்கள். இரண்டாவதாக இந்த விஷயத்தில் நீங்கள் முதலில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை அணுகுங்கள். நீங்கள் அறுவை சிகிச்சை நிமிரனிடம் செல்லும்போது கண்டிப்பாக உங்கள் காதலியையும் உங்களுடன் அழைத்துச் செல்ல மறக்காதீர்கள்.

அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்தப் பிறகு அவள் சொன்னதை கடைபிடித்தால் அவள் உங்களிடம் கேட்ட மற்ற விஷயங்கள் பற்றியும், நீங்கள் அவளை எப்படி சந்தித்தீர்கள் என்பதை பற்றியும் அவளிடம் சொல்லுங்கள். ஒருவேளை உங்களது காதலி இன்னும் அவளது வார்த்தையில் பிடிவாதமாக இருந்தால், உங்கள் உறவு ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அன்பு இதயத்தில் இருந்து வருவதால், விருத்தசேதனத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிற காரணங்கள்:
விருத்தசேதனம் என்பது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும் இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மத நோக்கங்களுக்காகவும் செய்யப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். விருத்தசேதனத்தின் போது, ஆணின் ஆண்குறியில் உள்ள முந்தோல் வெட்டப்பட்டு பிரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆனது அறிவியல் ரீதியாக சரியானதுதான். உங்களுக்கு தெரியுமா.. விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண்களுக்கு ஹச்.ஹெவி மற்றும் பிற பால்வினை நோய்கள் வருவதை தடுக்கும். மேலும், விருத்தசேதனம் ஒரு ஆணின் பாலியல் வாழ்க்கை ம மற்றும் ஆரோக்கியத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios