செக்ஸ் வேண்டாம்னு தவிர்ப்பதால் எவ்ளோ ஆபத்துக்கள் வரும் தெரியுமா? 

Relationship Tips  : உடலுறவு வைத்து கொள்ள வேண்டாம் என்று சிலர் தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் சொல்லும் விளக்கம் இங்கு பகிரப்பட்டுள்ளது. 

relationship tips what happens if you continuously avoid sex in tamil mks

செக்ஸ் கணவன் மனைவியை இணைக்கும் பாலம். உடல்ரீதியான தொடர்பு இல்லாவிட்டாலும் மனம் இணைந்தால் போதும் என சிலர் காதல் வசனங்களை அள்ளி தெளித்தாலும், உடல் இணைவு மிகவும் முக்கியம். இருவருக்கும் உடலுறவில் ஈடுபாடு இல்லாவிட்டால் பிரச்சனை கிடையாது. ஆனால் அதில் ஒருவருக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில் கூட உறவில் சிக்கல் தான். இது தவிர உடலுறவு கொள்ளாமல் இருந்தால் உடல், உள்ளம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாலாம். 

செக்ஸ் வேண்டாம் என தள்ளி போடும் ஆண்களுக்கு விறைப்பு குறைபாடு (Erectile dysfunction) வந்துவிடும். இந்த பாதிப்பு பொதுவாக ஆண்களுக்கு 45 வயதுக்கு பின் வரும். ஒருவேளை நீங்கள் அடிக்கடி உடலுறவை தவிர்த்தால் முன்கூட்டியே இந்த பிரச்சனை வந்துவிடும். 

இதையும் படிங்க:  மனைவிக்கு செக்ஸில் ஆர்வம் வராததற்கு இதுதாங்க காரணம்.. உடனே சரி செய்ங்க..

சிறுநீர் வெளியேறும் பாதையில் உங்களுக்கு தொற்று ஏற்படலாம். இதனை சிறுநீரக பாதை தொற்று (Urinary tract infection) என சொல்வார்கள். சிலர் செக்ஸ்.  வைக்காமல் விந்தணுவை அடக்கி வைத்துவிடுவார்கள். இதனால் சிறுநீரக பாதை தொற்று வரக்கூடும். பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் காலத்தில் சதைப் பிடிப்பு, இடுப்பு வலி போன்றவை வழக்கத்தை காட்டிலும் அதிகமாகும். 

தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபடாமல் தள்ளி வைத்தால் பாலியல் உறவு மீதுள்ள விருப்பம்  குறையும். இது சிலருக்கு வயது மூப்பின் காரணமாக ஏற்படலாம். இளம் வயதில் உறவு கொள்ளாவிட்டாலும் ஏற்படும். 

இதையும் படிங்க:  பெண்கள் அதுல சுத்த வேஸ்ட்! இந்த வயசுக்கு பின் பாலுறவில் சுறுசுறுப்பே இருக்காதுனு சொல்றாங்களே.. அது உண்மையா?

உடலுறவை தவிர்க்கும் ஆண்களுக்கு பிற்போக்கு விந்து என்ற (Retrograde ejaculation) பிரச்சனை ஏற்படும். இதனால் குறைந்த அளவில் விந்து வெளியேறும். சிறுநீருடன் விந்து வெளியேறும். குறிப்பாக இந்த பிரச்சனையானது நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் பாதித்தோர், சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை செய்த நபர்களுக்கு வரும். பிற நபர்களுக்கு செக்ஸ் அடிக்கடி தவிர்ப்பதால் தான் ஏற்படும். சிலருக்கு விந்து முந்துதல் போன்ற பிரச்சனைகள் கூட வரலாம். இந்த பாதிப்பு இருந்தால் உடலுறவை ஆரம்பித்த 2 அல்லது 3 நிமிடங்களில் விந்து வெளியே வந்துவிடும். 

உடலுறவை தவிர்க்கும் பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி (Vaginal dryness) உண்டாகும். இதனால் அமரும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, சிறுநீர் வெளியேறும் தருணம்,  உடலுறவு கொள்ளும் போது பிறப்புறுப்பில் மிகவும் வலி ஏற்படும். 

நீங்கள் தொடர்ந்து உடலுறவை தள்ளி வைத்தால் இந்த பிரச்சனைகள் மோசமாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios