தன்பாலின திருமணம் பற்றி நாடாளுமன்றம் முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
தன்பாலின திருமணம் பற்றி நாடாளுமன்றம் சட்டமுறைப்படி முடிவெடுத்துக்கொள்ளும் எனவும் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு வாதிட்டுள்ளது.
தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்வதை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான இந்த அமர்வில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்பது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தினரின் பார்வை எனக் கூறப்பட்டுள்ளது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கம்.. தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மேலும், "தன்பாலின திருமணம் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வாழும் மக்களின் கருத்துகள், மதங்கள், தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள், திருமண முறைகள் ஆகியவை மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு விரிவான பார்வையுடன் இதனை அணுக வேண்டும்" என்று மத்திய அரசு வாதிடுகிறது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்கள் தொடர்பான முடிவு எடுக்கும் பொறுப்பை நீதிமன்றம் நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற இயல்புக்கு மாற மாற்றுத் திருமணங்களை சமூகம் மற்றும் மத அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாமா என மக்களே முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு, தன்பாலின ஈர்ப்பு திருமணம் அடிப்படை உரிமை அல்ல; தனிநபர் உரிமையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
திருமணம் என்பது சட்டத்திலும் மதத்திலும் புனிதமானதாகவும் பன்முகத்தன்மையுடனும் உள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்தால், அது ஒவ்வொருவரையும் தீவிரமாக பாதிக்கும். பாலியல் உறவுக்கான தேர்வு மற்றும் பிறரின் தலையீடு இல்லாமல் இருப்பதற்கான உரிமை போன்றவை ஏற்கெனவே திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன் கீழ் அடிப்படை உரிமைகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு கூறுகிறது.
சரிவை நோக்கி செல்லும் கொரோனா பாதிப்பு..! 10 ஆயிரத்துக்கு கீழ் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி