உடலுறவை மறுப்பது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குற்றமாகலாம்! ஐபிசி-யின் கீழ் குற்றமாகாது! - கர்நாடக ஹைகோர்ட்
கணவன் மனைவி இடையே உடலுறைவை மறுப்பது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படலாம். ஆனால், இந்திய தண்டனைச் சட்டம் 498A-யின் கீழ் அது குற்றமாகாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவன் மனைவி இடையே உடலுறைவை மறுப்பது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படலாம். ஆனால், இந்திய தண்டனைச் சட்டம் 498A-யின் கீழ் அது குற்றமாகாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவர் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக கடந்த 2020ல் மனைவி தொடர்ந்த வழக்கு ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
(இந்திய தண்டனைச் சட்டம்)ஐபிசி பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடைச் சட்டம், 1961-ன் பிரிவு 4-ன் கீழ் தனக்கும் அவரது பெற்றோருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை எதிர்த்து கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை, நீதிபதி எம்.நாகபிரசன்னா அமர்வுக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு எதிரான ஒரே குற்றச்சாட்டு, அவர் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக முறையைப் பின்பற்றுபவர் என்றும், “காதல் என்பது ஒருபோதும் உடல் ரீதியானது அல்ல, அது மனதோடு சேர்ந்த உணர்வாக இருக்க வேண்டும்” என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அவர் "தனது மனைவியுடன் உடல் உறவில் ஈடுபட விரும்பவில்லை" என்று நீதிபதி குறிப்பிட்டார். இது "சந்தேகத்திற்கு இடமின்றி இந்து திருமணச் சட்டத்தின் 12(1)(a) பிரிவின் கீழ் திருமணம் முடித்தால், கொடுமையாக கருதலாம். ஆனால் அது 498A பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளதன் படி கொடுமைபடுத்ததல் கீழ் வராது என்று கூறினார்.
இந்த ஜோடி டிசம்பர் 18, 2019 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால் மனைவி திருமண வீட்டில் 28 நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார். அவர் பிப்ரவரி 5, 2020 அன்று, 498A பிரிவு மற்றும் வரதட்சணைச் சட்டத்தின் கீழ் போலீசில் புகார் செய்தார். மேலும், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 12(1)(a)-ன் கீழ், திருமணத்தை முடிக்கவில்லை எனக் கூறி, கொடுமையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி குடும்ப நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். பின்னர், நவம்பர் 16, 2022 அன்று திருமணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கிரிமினல் வழக்கைத் தொடர மனைவி முடிவு செய்தார்.
இந்நிலையில், குற்றவியல் நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது என்று நீதிபதி எம்.நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார். இல்லையெனில் அது "சட்டத்தின் துஷ்பிரயோகம் மற்றும் தவறிழைக்கப்படும் நீதி'' என்றும் குறிப்பட்டார்.