கணவன் மனைவி உடன் செய்யும் எந்த பாலியல் செயலும் கற்பழிப்பு அல்ல.. கணவருக்கு எதிரான வழக்கு ரத்து..
15 வயதுக்குக் குறையாத மனைவியுடன் கணவன் கொள்ளும் உடலுறவு அல்லது எந்த ஒரு பாலியல் செயலும் கற்பழிப்பு அல்ல என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கணவன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதால் தொற்று நோய் பரவுவதாக கூறி மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும், இதனால் தனக்கு தொற்று ஏற்பட்டதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 20 லட்சம் வரதட்சணை கேட்டு, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதி பிரேம் நாராயண் சிங் அடங்கிய தனிநபர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிமினல் கோணத்தை காட்டவே தன் மீது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கணவர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும், திருமண வாழ்க்கையின் போது கணவன் மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தல்!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கணவர் மீதான இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் “எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ள படி மனுதாரரின் செயல் குற்றச்சாட்டுகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 இயற்கைக்கு மாறான செக்ஸ் கீழ் குற்றமாகாது. அதன்படி, மனுதாரர் இந்த குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்,” என்று நீதிபதி கூறினார். மேலும் கணவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி கூறினார்.
கணவருக்கு எதிரான ஐபிசியின் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செயல்), பிரிவு 294 (துஷ்பிரயோகம்) மற்றும் பிரிவு 506 (அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை கணவரை விடுவிப்பதாக நீதிபதி கூறினார். .
எனினும் உயர் நீதிமன்றம் 498-ஏ (ஒரு பெண்ணை அவரது கணவர் அல்லது அவரது உறவினரால் கொடுமைப்படுத்துதல்) ரத்து செய்ய மறுத்து, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்தியாவில் இதுவரை திருமண பலாத்காரம் அங்கீகரிக்கப்படவில்லை எனக் கூறி கணவருக்கு எதிரான இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்னதாக, இந்தியாவில் இதுவரை திருமண பலாத்காரம் அங்கீகரிக்கப்படவில்லை எனக்கூறி, இயற்கைக்கு மாறான பாலியல் குற்றத்திற்காக கணவர் மீது மனைவி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திருமண பலாத்காரம் ஒரு குற்றமல்ல என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சராகும் தெலுங்கு தேசம் கட்சி கோடீஸ்வர எம்.பி.! ரெண்டு பேரை ஓகே செய்த சந்திரபாபு நாயுடு!
15 வயதுக்குக் குறையாத மனைவியுடன் கணவன் மேற்கொள்ளும் கற்பழிப்பு அல்ல என்றும். திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே உடலுறவு என்பதால் மனைவியின் சம்மதம் முக்கியமல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமணத்தின் போது ஒரு மனைவி தனது கணவனுடன் வசிக்கிறாள், பிறகு பதினைந்து வயதுக்கு குறைவான தனது சொந்த மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்றும் கூறியுள்ளது. மனைவியால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்தும் உத்தரவிட்டது.
- forced sex with wife is not rape
- husband wife sex
- marital rape
- marital rape in india
- marital rape india
- marital rape laws
- marital rape statistics in india
- marital rapes
- not rape
- rape
- rape by husband is a rape
- rape case against husband
- rape in india
- sex with wife below 18 is rape
- sexual act by husband not rape
- sexual intercourse by force not rape
- sexual intercourse by husband with wife
- unnatural sex with wife
- unnatural sex with wife is not rape