Arthritis: இந்த ஒரு வைத்தியம் போதும் மூட்டுவலியை முற்றிலுமாக குணமாக்க!
மூட்டு வலிக்கு வீட்டு வைத்திய முறையை மேற்கொள்ளும் போது நிரந்தர தீர்வை பெற முடியும். மூட்டுவலியால் அவதிப்படும் நபர்கள், உடனடியாக அதற்கான தீர்வைப் பெற முயல வேண்டியது அவசியம். இல்லையென்றால், நடப்பதற்கு கூட சிரமமாகி விடும். அவ்வகையில் மூட்டு வலிகளை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம் முறை ஒன்றை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் சுமார் 40 வயதைத் தாண்டும் போது மூட்டுவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வயது ஏற ஏற எலும்புகள் வலுவிழந்து போவதே, இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம். மூட்டுவலி என்பது கை மூட்டு, கை மணிக்கட்டு, மேற்தோள் பட்டை, கால் மூட்டு மற்றும் இடுப்பு மூட்டு போன்ற இடங்களில் உண்டாகும் அசௌகரிய உணர்வு, சோர்வு, வலி மற்றும் வீக்கம் போன்ற உணர்ச்சிகளை குறிக்கிறது. இது போன்ற பாதிப்புகள் உண்டாகும் போது, சிலர் எலும்பியல் நிபுணர்களை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். இன்னும் சிலர் வீட்டு வைத்திய முறைகளை கையாள்வார்கள்.
மூட்டு வலி
மூட்டு வலிக்கு வீட்டு வைத்திய முறையை மேற்கொள்ளும் போது நிரந்தர தீர்வை பெற முடியும். மூட்டுவலியால் அவதிப்படும் நபர்கள், உடனடியாக அதற்கான தீர்வைப் பெற முயல வேண்டியது அவசியம். இல்லையென்றால், நடப்பதற்கு கூட சிரமமாகி விடும். அவ்வகையில் மூட்டு வலிகளை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம் முறை ஒன்றை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
மூட்டு வலியால் உண்டாகும் பிரச்சனைகள்
- மூட்டு வலி தொடரும் சமயத்தில் உடலின் உள்ளே இருக்கும் உள்பகுதி பாதிப்படையும்.
- ஆர்த்ரைட்டிஸ் (arthritis) எனும் மூட்டு வீக்கம்
- எலும்புப்புரை (Osteoporosis)
- எலும்பு நோய் (rickets)
- முடக்குவாதம்
- எலும்பில் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது
- எலும்பைச் சுற்றி இருக்கும் இணைப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது.
'ஹெபடைட்டிஸ்'- சரிச்செய்யும் மருத்துவம்
தேவையானப் பொருட்கள்
- மஞ்சள் - 1 டீஸ்பூன்
- கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
- எருக்கன் செடி - 2 இலை
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள், கற்றாழை ஜெல், மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய மூன்றனையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் எருக்கன் செடியில் இருக்கும் 2 இலைகளை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, ஒரு கடாயின் மேல் வைத்து இளம் சூட்டில் நன்றாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பாவணை முறை
மூட்டு வலி உள்ள இடத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு, மஞ்சள் கலவையை அந்தப் பகுதியில் தடவியதும், மெதுவாக மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் அந்த இடத்தின் மேலே, ஒரு இலையை வைத்து துணி அல்லது பேண்டேஜைக் கொண்டு மிகவும் இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.