வெர்ஜ்னிட்டியை இழந்துவிட்டால் உடலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?

வெர்ஜ்னிட்டி என்பது  அறிவியல் சார்ந்தது மட்டுமே.  அதன்மீது  கட்டமைக்கப்படும் அனைத்து கருத்துக்களும்  சித்தரிப்புகள்  மட்டுமே. குறிப்பாக இவை சார்ந்த கருத்துக்கள் அனைத்து பெண்களை குறிவைத்து மட்டுமே முன்வைக்கப்படுகின்றனர்.

how to get over the jitters after first time sex

வெர்ஜ்னிட்டியை இழப்பது ஒரு மோசமான செயல் என்கிற நிலைப்பாடு பலரிடம் உள்ளது.  கற்பு,  ஒழுக்கம்  என்கிற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு,  அதன்மீது ஒரு அச்ச உணர்வு சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.  அதை இழந்து விட்டால்  வாழ்க்கையே  அவ்வளவுதான் என நினைக்கும் அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெர்ஜினிட்டி மீது தவறான புரிதலுடன் பலரும் இருப்பதை பார்க்க முடிகிறது.

நான் சொல்லும் வெர்ஜ்னிட்டி என்பது  அறிவியல் சார்ந்தது மட்டுமே.  அதன்மீது  கட்டமைக்கப்படும் அனைத்து கருத்துக்களும்  சித்தரிப்புகள்  மட்டுமே. குறிப்பாக இவை சார்ந்த கருத்துக்கள் அனைத்து பெண்களை குறிவைத்து மட்டுமே முன்வைக்கப்படுகின்றனர். கற்பொழுக்கம் என்கிற பெயரில், கற்புக்கரசி என்கிற தோற்றத்திலும் பெண்களுடைய பாலியல் உணர்வுகள் மதிப்பீடு செய்யப்படுவது தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. இது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது மட்டுமே என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.  பெண்களின் பிறப்புறுக்குகள் உள்ள ஹெமைன் என்கிற தோல் பகுதி உடலுறவின் போது கிழியும். அதை தான் வெர்ஜினிட்டி என்றும் கற்பொழுக்கம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது உடலுறவின் போது தான் கிழிய வேண்டும் என்பது அல்ல,  விளையாட்டு துறையில் இருக்கும் வீராங்கனைகள்,  அதிக உடலுழைப்பு வேலை செய்யக்கூடிய பெண்கள்,  தையல் வேலையில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோருக்கு அவர்களுடைய உடல் இயக்கத்தின் காரணமாகவே, அது இயற்கையாகவே கிழிந்துவிட வாய்ப்புள்ளது. அது நேரும் போது, தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக பல பெண்களும் கருதுகின்றனர். இதனால் மனக்குழப்பம் அதிகரித்து, மன அழுத்தத்தால் தவிக்கும் பெண்களும் உள்ளனர். வெர்ஜினிட்டியை இழப்பதும், இயற்கையாஜ ஹெமைன் கிழிவதும் பெரிய விஷயமல்ல. இதுகுறித்து மருத்துவ ஆதாரங்களுடன் விரிவாக பார்க்கலாம்.

உடலுறவு சார்ந்த உணர்வு

உயிர்களாக பிறந்த அனைத்துக்கும் காதல் என்கிற உணர்வு உள்ளது.  அதை வெளிப்படுத்த ஒரு செயல்பாடு தான் உடலுறவு.  உடல் ஆரோக்கியம் கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த எண்ணம் இருக்கும் என்பதே உண்மை.  அதனால் பாலியல் சார்ந்த சிந்தனைகள், உடலுறவு சார்ந்த உணர்வுகள் ஏற்படும் போது எந்தவிதமான குழப்பம் மனநிலையை  அடையக்கூடாது.  இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த நடைமுறை தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம் உடலுக்குள் இருக்கும் ஆக்சிடாக்சின் என்கிற ஹார்மோன் காதல் சார்ந்த எண்ணங்களை தூண்டிவிடுகிறது. இதனால் உடலில் அன்பு, மகிழ்ச்சி, காதல், காமம் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.

உடலில் பிரச்னையில்லை

முதன்முதலாக உடலுறவின் போது பெண்களுக்கு ஹெமைன் கிழிகிறது.  அதனால் பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வழியும்.  இது நேரும்போது தனது உடலுக்குள் ஏதோ தவறு நடந்து விட்டதாக பலரும் கருதுகின்றனர்.  குறிப்பாக தான் கன்னித்தன்மையை இழந்து விட்டதால் தான்,  பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதாக பலரும் அஞ்சுகின்றனர்.  உண்மையில் அப்படி எதுவும் கிடையாது.  உடலுறவுக்குப் பிறகு ஹெமைன் கிழிந்து  ரத்தம் வழிவது இயற்கை சார்ந்ததே ஆகும். அதையடுத்து,  உடலுறவுக்குப் பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்கிற எண்ணமும் பலரிடம் உள்ளது. இதுவும் ஒரு பொய்யான கட்டமைப்புதான். உடலுறவு கொள்வது குற்றமல்ல, உங்களின் விருப்பத்தின் பேரில் நடந்த கலவி என்பது இயற்கையான நிகழ்வுதான்.

எடை குறைப்புக்கு உறுதுணை செய்யும் பாப்கார்ன்..!!

மனரீதியாக தயாராக இருப்பது அவசியம்

நீங்கள் முதல்முறையாக கலவியில் ஈடுபடும்போதும் சரி, அதையடுத்து ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் சரி, உங்களை நீங்கள் மனதளவில் தயார் செய்துவைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது நமக்குள் பலவித எண்ணங்கள் தோன்றும்.  அப்போது ஏற்படும் கிளர்ச்சி நமக்குள்  அச்சத்தையும்  பதற்றத்தையும் அதிகரிக்கும்.  இதனால் சில எதிர்மறையான எண்ணங்கள் கூட தோன்றும்.  அப்போது மனதிற்குள் குழப்பம் அதிகரித்து உடலுறவு முடியும் போது குற்ற உணர்வில் சிக்கிக்கொண்டு தவிப்பது போன்ற மன உணர்வு ஏற்படும். அதனால் எப்போதும் உடலுறவில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு மனரீதியாக உங்களை தயார் செய்து கொள்வது நன்மையைத் தரும்.  ஒருவேளை இது சார்ந்து உங்களுக்கு சந்தேகங்கள் தொடர்ந்து இருக்குமானால்,  உரிய மருத்துவரை அணுகுங்கள்.  பல்வேறு அதிகாரப்பூர்வ மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் இது சார்ந்து விளக்க வீடியோக்களையும் வழங்கி வருகின்றனர்.  அதை பார்த்தும் நீங்கள் தயாராகலாம்

கண்டவுடன் காதல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?

உடலுறவு வெறும் உடலுறவு மட்டுமே

உடலுறவுக்கு பின் நீங்கள் உறவு கொண்ட நபருடன் காதல் வயப்பட வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது.  அதேபோன்று அந்த நபரை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதும் தவறு. உடலுறவு வைத்துக் கொள்வது என்பது உங்களுடைய விருப்பம் சார்ந்தது மட்டுமே.  ஒருவேளை நீங்கள் உறவு கொண்ட நபருடன் உறவை தொடர்வது உங்களுடைய விருப்பம் தான்.  ஆனால் அந்த உறவு  அசௌகரியமாக இருந்தாலோ அல்லது சிக்கல்கள் கொண்டிருந்தாலும் அதை விட்டு வெளியேறி விடுங்கள். உங்களை நீங்களே கட்டாயப்படுத்தி கொண்டு வாழ வேண்டும்  என்கிற எண்ணங்களுடன் இருப்பது தவறு.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios