Asianet News TamilAsianet News Tamil

ஆணுறையை தவிர கருத்தடைக்கு பயன்படும் பிற பொருட்கள் குறித்து தெரியுமா உங்களுக்கு..?

குழந்தை வேண்டாம் என்று கருதும் தம்பதிகள், பலர் கருத்தடைக்கு ஆணுறையை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக செயற்கையான முறையில் கருத்தடைக்கு செய்யப்படும் முயற்சிக்கு Non Hornonal என்று பெயர். எனினும் இந்த முறைக்கு வெறும் ஆணுறை மட்டுமல்ல பல்வேறு பொருட்கள் பயன் தருகின்றன. ஆணின் விந்தணுவை பெண்ணின் உடலில் சேரம் விடாமல் தடுப்பதற்கு பயன்பாட்டில் இருக்கும் வேறு சில பொருட்களை குறித்தும் தெரிந்துகொள்ளலாம். 
 

5 types of non hormonal contraception and its side effects
Author
First Published Dec 3, 2022, 11:37 AM IST

ஆணுறை

கருத்தடை பயன்பாட்டுக்கு பலரால் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள் ஆணுறைகள் தான். உலகளவிலும் இதுதான் கருத்தடை பயன்பாட்டுக்கு முதலிடத்தில் உள்ளது. எனினும் ஆணுறை மூலம் கருத்தடை ஏற்படாமல் தடுப்பதற்கு 80 முதல் 85 விழுக்காடு வரை மட்டுமே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றன. 

ஸ்பெர்மிசைட்ஸ்

பெஸ்டிசைட்ஸ் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்போம். அது பூச்சிகளை கொல்வதற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி ஆகும். அதேபோன்று ஆணின் விந்தணுக்களை கொல்வதற்கு பயன்படும் ஸ்பெர்மிசைட்ஸ் விந்துக்கொல்லியாகும். இது கிரீம் ஜெல் மற்றும் பொங்கும் நுரை வடிவுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்பெர்மிசைட்ஸுகள் கருத்தடைக்கான வாய்ப்பை 70 முதல் 75 சதவீதம் வரை மட்டுமே உறுதி செய்கின்றன.

பெண் கருத்தடை உறை

ஆணுறை போன்றே, பெண்கள் அணிவதற்கு ஒரு உறை உள்ளது. அதுதான் பெண்ணுறை என்று கூறப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Female Condoms  என்று குறிப்பிடப்படுகிறது. ஆணுறை போன்றே இருக்கும், ஆனால் ஆணுறையை விட சற்று நீளமாக பெரிதாக இருக்கும். இந்த கருத்தடை சாதனத்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு 80 முதல் 85 சதவீதம் வரை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆணுறைக்கு இணையாக பல தம்பதிகள் பெண்ணுறையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!

சிலிகான் கப்

ஒரு குவளை போன்ற வடிவில் இருக்கும் கருத்தடை சாதனம் தான் டயாஃப்ரம். இதுவும் பெண்கள் பலர் பயன்படுத்தும் முக்கிய கருத்தடை பொருளாக பார்க்கப்படுகிறது. கூம்பு வடிவில் இருக்கும் இந்த சாதனம் சிலிகானில் தயாரிக்கப்படுகிறது. விந்துகொல்லி ஜெல் அல்லது கிரீமினை இந்த டயாஃப்ரமில் தேய்த்துவிட்டு, பெண்ணுறுப்பில் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் 85 முதல் 95 சதவீதம் வரை கருத்தடை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் மேலைநாடுகளில் பலரும் இதை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

ஆவுலேஷன் கணக்கிடுதல்

இது பழங்காலம் கொண்டு பின்பற்றப்பட்டு வரும் கருத்தடை முறையாகும். அதன்படி பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் முதல்நாளில் கணவனுடன் உறவுகொண்டால், கருத்தரிக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறையால் 25 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே கருத்தடைக்கான வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios