"என் மனைவி நம்புற சாமியாருக்கு.. அவ மேல ஒரு கண்ணு" பெண் மோகம் கொண்ட சாமியாரால் சங்கடப்படும் கணவனின் சோக கதை..!
தன் மனைவி மீது ஆன்மீக குரு நாட்டம் காட்டுவதால் புலம்பும் கணவனுக்கு நிபுணர் சொல்லும் பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த கணவனின் மனக்குரல்: "என் மனைவி ஆன்மீகத்தில் ரொம்ப ஈடுபாடு கொண்டிருக்கிறாள். ஆனாலும் எங்கள் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் நன்றாக சமநிலைப்படுத்துகிறார். அதனால் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால், அவளுடைய குருவை எனக்குப் பிடிக்கவில்லை. அந்த குருஜியின் கூட்டத்திற்கு அவள் என்னை அழைத்துச் செல்லும் போதெல்லாம், அந்த சாமியார் அவளை கண்களால் சோதிப்பதைப் பார்க்கிறேன். ஆசீர்வாதத்திற்காக அவள் கையைப் பிடிக்கும் விதம் கூட, ஒரு குருவை போல இல்லை.
அது எனக்கு சரியாப்படவில்லை. இதை நான் அவளிடம் பகிர்ந்து கொண்டபோது, அவள் என்னுடன் சண்டையிட்டு, அவளுடைய உணர்வுகளையும் நம்பிக்கையையும் புண்படுத்திவிட்டேன் என கோபித்து கொண்டாள். அந்த குருவின் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது. இதை எப்படி அவளுக்கு சொல்லி புரியவைப்பது?" என புலம்பியிருக்கிறார்.
மனைவியின் குமுறல்:"என் கணவர் ஒரு எதார்த்தவாதி. மதம் அல்லது ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் இல்லாதவர். ஒரு நாள் அவர் என்னிடம் சொன்னார், "என் குருஜிக்கு என் மீது ஆசை இருப்பதாக"..அவர் எப்படி இப்படிச் சொல்ல முடியும்? என் குரு.. மிகவும் அன்பானவர், அவருக்கு இப்படிப்பட்ட தூய்மையற்ற எண்ணங்கள் இருப்பதாக நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். என் குருவை பார்ப்பதைத் தடுக்க என் கணவர் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார். நான் என் கணவருடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இது எங்கள் திருமணத்தை பாதிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?" என்கிறார்.
இந்த கதையில் நிபுணரின் விளக்கம்..: ஆன்மிகம்.. தனித்துவத்தின் மிக உயர்ந்த நிலையை அடைய அமுதமாக இருந்து வருகிறது. ஆனால் இதில் சில மோசடி, தவறான நபர்களால் நோக்கமும் கலந்துவிட்டது. இதனால் புனிதத்தன்மை கெட்டு கலப்படமாகிவருகிறது. ஒரு ஆன்மீக குருவின் அவசியம் என்பது வழிகாட்டலுக்கு முக்கியம். ஆனால் சரியானதை தெரிந்து கொண்டு செல்வது கடினம்.
இதையும் படிங்க: மாமியார் தாய்ப்பால் கொடுக்குறாங்க, எந்த வீட்டுல இப்படி நடக்கும்?சம்பவத்தை நேரில் பார்த்த மருமகள் செய்த காரியம்
கணவருக்கான பதில்..
"உங்கள் மனைவி தன் ஆன்மீக குருவை உண்மையாக நேசிக்கிறார் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொண்ட உண்மையைப் அவர் பார்க்க முடியாத அளவுக்கு அந்த அன்பு கண்களை மறைக்கிறது. உங்கள் மனைவியின் நம்பிக்கை கலப்படமற்றது. நீங்கள் அவளுடைய ஆன்மீக உணர்வுக்கு எதிரானவர் அல்ல, மாறாக அந்த வழிமுறைகளை உணர்ந்து கொண்டவர் என்பதை புரிய வைக்க வேண்டும். குரு ஒன்றும் எல்லாத்திற்கும் மேலான புனிதமானவர் அல்ல. அவரும் இரத்தம், சதை, உணர்ச்சி... மிக முக்கியமாக காம உணர்வுகளையும் கொண்டவர் தான். இதை மனைவிக்கு புரிய வையுங்கள். அவர் தவறாகவும் இருக்கலாம், இதற்கு நம் நாட்டில் ஏற்கனவே நிறைய நிகழ்வுகள் சான்றாக உள்ளன.
கடவுளின் பெயரால் அழைக்கப்படுபவர்கள் இங்கு கேவலமானவர்களாக மாறிவிடுகிறார்கள்! உங்கள் மனைவி இந்த உண்மையை உணர்ந்தவுடன், உங்கள் உறவு சுமுகமாக இருக்கும்" என அந்த கணவனுக்காக நிபுணர் பதிலளித்திருக்கிறார்.
அந்த மனைவிக்கு பதில்..
"ஒருவரின் நோக்கங்களையும், உடல் மொழியையும் தவறாகப் புரிந்துகொள்ள உங்கள் கணவர் எல்.கே.ஜி குழந்தை அல்ல. நீங்கள் ஒரு ஆன்மீக இடத்தில் இருப்பதை அவர் அறிவார், அதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் குருவின் தன்மையை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் அவர் சில நேரங்களில் தவறாகவும் இருக்கலாம்! அந்த விஷயத்தை நீங்கள் சிந்திக்க வேண்டும். கணவரின் கருத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரது வாயிலிருந்து வரும் அனைத்தையும் பின்பற்ற வேண்டாம். அதே நேரத்தில் உங்களுடைய நல்லதுக்காக சொன்னால் அதை கருத்தில் கொள்வது நல்லது. ஆன்மீகமாக இருப்பது தவறில்லை.. ஆனால் சரி மற்றும் தவறுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக நம்பக் கூடாது" என்கிறார் நிபுணர்.
கணவனும் மனைவியும் ஒருவருடைய உணர்வுக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும். ஒருவருடைய கருத்தை மற்றொருவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நல்ல புரிதலுடன் உறுதியாக இருக்கும். மூன்றாம் நபர்களால் அந்த உறவை சிதைக்க முடியாது. எந்த உறவுக்கும் ஆழமான நம்பிக்கையும் புரிதலும் அவசியம். நலம் வாழுங்கள்.
இதையும் படிங்க: ரத்த பசி கொண்ட அகோரி பூஜை..மனைவியை கட்டிப்போட்டு மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சி..வெக்கமில்லாம கணவன் செய்த ஈன செயல்