இரவில் கணவனும் மனைவியும் இதை செய்தால் சண்டையே வராது.. காதல் பொங்கும்!
காதல் வழியும் இரவில் உங்கள் துணையுடன் இந்த விஷயங்களை செய்தால் சண்டையே வராது. அவை குறித்து இங்கு காணலாம்.
திருமண உறவில் சில விஷங்களை செய்யும்போது தான் கணவன் மனைவிக்குள் சுவாரஸ்யமும், நெருக்கமும் அதிகமாகும். அதை எப்போது நினைத்தால் மனம் துள்ளி குதிக்கும். இரவில் சில விஷயங்களை செய்யும்போது கூடுதல் அழகும், நெருக்கமும் உண்டாகும். அதை தெரிந்து கொள்ளுங்கள்.
கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நபர்களாக இருந்தால் வீட்டிற்கு திரும்பியதும் கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு இணைந்து சமையல் செய்யலாம். இப்படி இணைந்து சமையல் செய்யும்போது நிறைய உரையாடலாம். கொஞ்சம் சிரிப்பு, நகைச்சுவை என அந்த தருணங்கள் உங்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். தங்கள் இணையர் தங்களுக்கு உதவியாக இருப்பதே எல்லாம் மனைவியும் விரும்புவர். அந்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும் நான் உனக்கு இருக்கிறேன் என்ற உணர்வு முக்கியமானது.
இரவில் சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும். இரவில் உங்களுடைய துணையின் கைகளை கோர்த்துக்கொண்டு இசையை கேட்டபடியே நிலவைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது மனதிற்கும் உறவிற்கும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: உலக பணக்காரரின் மருமகள் என்றால் சும்மாவா...ராதிகா மெர்ச்சென்ட் பர்ஸ், ஆடை விலை தெரியுமா?
நீங்கள் புதிதாக திருமணமான தம்பதியாக இல்லாமல் உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் குடும்பமாக நேரத்தை செலவிடலாம். குழந்தையோடு விளையாடுவது, அவர்களுக்கு கதை சொல்வது என கொண்டாட்டமான தருணங்களை உருவாக்கலாம். இது பகல் பொழுதில் உங்களை பிரிந்து வாடும் குழந்தைகளுக்கு இதமாக இருக்கும்.
இரவில் உங்களுடைய துணையிடம் போதிய நேரத்தை செலவிட்டு அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். கணவன், தன் மனைவியின் உடல் நலத்தையும் மனநலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல மனைவியும் தன் கணவனை அறிந்து கொள்ள வேண்டும். வேலை பளுவினால் தலைவலியை அனுபவிக்கும் உங்களுடைய துணைக்கு தலையை மசாஜ் செய்வது, நாள் முழுக்க சமையலறையில் நின்று கொண்டிருந்த உங்களுடைய மனைவிக்கு கால்களை மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். இந்த புரிதல் உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கைக்கும் உதவும்.
இதையும் படிங்க: இரவு சாப்பிட்டு வெறும் 2 நிமிடம் நடந்தால் இவ்வளவு நன்மைகளா? அட இது தெரியாம போச்சே!