ஆண்களே தாம்பத்ய பிரச்சினை நீங்க...ஆண்மை பலப்பட "இந்த" அரிசி மட்டும் சாப்பிங்க..!!
நம்முடைய பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் வலிமையடையும் சந்ததியும் பெருகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களின் க்ஷ் பலப்படும்.
இன்றைய காலத்தில் நம்முடைய வீடுகளில் பலவித ரக அரிசிகளை சமைப்பதற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது கேள்விக்குறி தான். அந்த வகையில் இப்போது மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா அரிசிகளைப் பற்றி பார்க்கலாம்.
பாரம்பரிய அரிசி வகைகள்:
சீரக சம்பா, காட்டு பொன்னி, சின்ன பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா போன்றவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர். "மாப்பிள்ளை சம்பா" அது பெயருக்கேற்றபடி மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் அவசியம்.
சத்துக்கள்:
மாப்பிள்ளை சம்பா அரிசி பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது.
இதையும் படிங்க: உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா?
ஆண்கள் குறைப்பாட்டை நீக்கும் மாப்பிள்ளை சம்பா:
ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி மாப்பிள்ளை சம்பா. உடலுக்கு அதிக அளவில் பலம் கொடுக்க கூடிய சத்து இதில் இருக்கிறது. குறிப்பாக மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு இது மிகவும் அவசியம். ஆகையால் தான் இளம் வயது உடைய ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட கொடுப்பார்கள். மேலும் உடலுக்கு வலுவை கொடுக்க கூடிய ஏராளமான சத்துகள் இதில் உள்ளது. மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்துவது தான்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்:
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். மேலும் இது சோர்வை நீக்கி, சுறுசுறுப்பாக இருக்கவும், நரம்புகளுக்கு வலிமையைம் கொடுக்கிறது. அதுபோல் உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைக்கவும், இதய கோளாறுகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது:
வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடுமட்டுமல்லாமல், நரம்புகளை வலுவடைய செய்கிறது.
இதையும் படிங்க: Astro Tips: அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் கருப்பு அரிசி; உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கும்..!!
ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது:
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே இதனை இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதை சாப்பிட்டால் ஜீரணமாகும் மற்றும் இது வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இது எலும்புகளை வலிமையடைச் செய்யும்.