Vegetables : ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவு தானா.? கோயம்பேட்டில் பீட்ரூட், கேரட், பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் விலை சற்று அதிகமாக உள்ளது. மற்ற காய்கறிகள், பழங்கள் விலை வழக்கம்போலவே உள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலையானது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Vegetables Price Today
பீட்ரூட் விலை என்ன.?
அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இஞ்சி விலை நிலவரம்
பச்சை மிளகாய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும், செள செள ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
vegetables
பூண்டு விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், சேனை கிழங்கு ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 300 முதல் 350 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது