தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணம் உயருகிறதா? உண்மையை போட்டுடைத்த போக்குவரத்துத்துறை!
மின்சார கட்டண உயர்வைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என எழுந்த தகவலுக்கு, தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என போக்குவரத்துத் துறை உறுதிபடுத்தியுள்ளது.
DMK Government
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வீட்டு வரி , சொத்து வரி , பத்திர பதிவு , டாஸ்மாக் , தொழில்வரி உயர்வு என அனைத்திலும் கட்டண உயர்த்தப்பட்டது. இந்நிலையில், அண்மையில் 2வது முறையாக மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் மின் கட்டணத்தை 4.83 சதவீதம் வரை உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு என்பது ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மின் கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
Government bus
அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்து அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: இன்று சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?
Transport Department
இந்நிலையில், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் செய்திக்கு அரசு போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்த எண்ணம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.