Shruti haasan : மிங்கிளாக ரெடி... ரிலேஷன்ஷிப் பற்றிய கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் சொன்ன ‘நச்’ பதில்
நடிகர் கமல்ஹாசனின் மகளும், சினிமா நடிகையுமான ஸ்ருதிஹாசன், தன்னுடைய காதல் தோல்வி குறித்து முதன்முறையாக பேசி இருக்கிறார்.
Shruti Haasan
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி பாடல்களுக்கு இசையமைப்பது, பாடல்கள் பாடுவது என தன் திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அண்மையில் இவர் இசையமைத்து, பாடி, நடித்திருந்த இனிமேல் என்கிற ஆல்பம் பாடல் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.
kamalhaasan daughter Shruti Haasan
தமிழில் ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ருதிக்கு, தற்போது கோலிவுட்டில் ஒரு பட வாய்ப்பு கூட இல்லை. இதனால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். விரைவில் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இதையும் படியுங்கள்... அச்சு அசல் அம்மா சரிகாவை ஜெராக்ஸ் காப்பி எடுத்ததுபோல் இருக்கும் ஸ்ருதிஹாசன் - வைரலாகும் ஓல்டு போட்டோ
Shruti Haasan Love Break Up
சினிமாவில் பிசியாக உள்ள ஸ்ருதிஹாசனுக்கு தற்போது வயது 40ஐ நெருங்கி வந்தாலும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக உள்ளார் ஸ்ருதி. இதுவரை இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார் ஸ்ருதி. முதலில் வெளிநாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்த அவர், அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். இதையடுத்து மும்பையை சேர்ந்த டூடுள் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதலும் அண்மையில் முறிந்தது.
Shruti Haasan Relationship Status
சாந்தனு உடனான பிரேக் அப்பிற்கு பின் அமைதி காத்து வந்த ஸ்ருதிஹாசன், அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்ருதி, இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். வேறொருவருடன் மிங்கிளாகவும் ரெடியாகத் தான் இருக்கிறேன். தற்போதைக்கு என்னுடைய வேலையில் கவனம் செலுத்திக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... PT Sir Review : கருத்து ஓகே... படம் எப்படி இருக்கு? பிகில் கிளப்பியதா ஹிப்ஹாப் ஆதியின் PT சார்? விமர்சனம் இதோ