- Home
- Gallery
- அச்சு அசல் அம்மா சரிகாவை ஜெராக்ஸ் காப்பி எடுத்ததுபோல் இருக்கும் ஸ்ருதிஹாசன் - வைரலாகும் ஓல்டு போட்டோ
அச்சு அசல் அம்மா சரிகாவை ஜெராக்ஸ் காப்பி எடுத்ததுபோல் இருக்கும் ஸ்ருதிஹாசன் - வைரலாகும் ஓல்டு போட்டோ
கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா இளம் வயதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

kamalhaasan, sarika
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நடிகர்களில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இவர் நடிகராக மட்டுமின்றி, இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். இவருக்கு கடந்த 1976-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. நடிகை வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட கமல்ஹாசன், அவருடன் 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். அதன்பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த 1988-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
kamalhaasan daughters
வாணி கணபதி உடனான பிரிவுக்கு பின்னர் அந்த ஆண்டே நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் கமல்ஹாசன். இந்த ஜோடிக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். கமலைப் போல் அவரது மகள்களும் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் - சரிகா ஜோடி சுமார் 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்திற்கு பின் தனது சம்பளத்தை 30% உயர்த்திய தமன்னா.. இத்தனை கோடியா?
shruti haasan childhood photo with kamalhaasan and sarika
கமல்ஹாசன் உடனான மண முறிவுக்கு பின்னர் மும்பையில் செட்டில் ஆன சரிகா, அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை சரிகா திருமணத்துக்கு பின்னர் தனது முன்னாள் கணவர் கமல்ஹாசனுடனும் மகள் ஸ்ருதிஹாசன் உடனும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அச்சு அசல் ஸ்ருதிஹாசன் போலவே இருக்கிறார். அந்த புகைப்படத்தை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு இருக்கிறார்.
shruti haasan
நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவரை அண்மையில் பிரேக் அப் செய்து பிரிந்தார். காதல் தோல்விக்கு பின்னர் அவர் இசையமைத்து நடித்த இனிமேல் என்கிற பாடல் ரிலீஸ் ஆனது. அப்பாடலில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆல்பம் பாடல் யூடியூப்பில் செம்ம வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கிரிக்கெட் கிரவுண்டில் பேரனின் பிறந்தநாள் விழா... தடபுடலாக கொண்டாடிய ரஜினிகாந்த் - வைரல் வீடியோ இதோ