மக்கள் திலகத்திற்கே டஃப் கொடுத்த நடிகையர் திலகம்.. சாவித்திரி வளர்த்த செல்லப்பிராணி - வைரலாகும் போட்டோ!
Legendary Actress Savitri : இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளில் 5 மொழிகளில் 252 படங்களில் நடித்து, 50 வயதை எட்டுவதற்கு முன்னதாகவே எதிர்பாராத முடிவை கண்டு, இறந்த மாபெரும் நடிகை தான் "நடிகையர் திலகம்" சாவித்திரி.
Gemini Ganesan
கடந்த 1951 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஆர்.வி ரெட்டி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியான "பாதாள பைரவி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை துவங்கியவர் தான் சாவித்திரி. இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான "அவள் ஒரு காவியம்" என்கின்ற திரைப்படம் தான்.
சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "நடிகையர் திலகம்" திரைப்படம் இவருடைய வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 138 தெலுங்கு திரைப்படங்கள், 100 தமிழ் திரைப்படங்கள், 6 கன்னட திரைப்படங்கள், 5 ஹிந்தி படங்கள் மற்றும் 3 மலையாள படங்கள் என்று மொத்தம் 252 படங்களில் நடித்துள்ளார் சாவித்திரி.
savitri ganesan
அன்றைய காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சாவித்திரி, அவர்களுக்கு இணையாக சம்பளம் பெற்ற ஒரே நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு இணையாக ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வந்துள்ளார் சாவித்திரி.
Savitri with cheetah
மக்கள் திலகமும், பலமுறை தமிழகத்தை ஆண்ட முதல்வருமான எம்ஜிஆர் அவர்கள் பல செல்ல பிராணிகளை வளர்க்கும் சுபாவம் கொண்டவர். அந்த வகையில் அவரிடம் "ராஜா" என்கின்ற ஒரு சிங்கம் வளர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரைப் போலவே சாவித்திரி அவர்களும் தனது வீட்டில் ஒரு சிறுத்தை குட்டியை வளர்த்து வந்துள்ளார். நடிகை சாவித்திரி பல ஆண்டுகள் தனது பண்ணை வீட்டில் வைத்து அந்த சிறுத்தை புலி வளர்த்து வந்தது குறித்து. அவருடைய மகள் சாமுண்டீஸ்வரி ஒரு முறை பேட்டியில் பேசியபோது இந்த தகவலை அளித்துள்ளார்.