மழை பிடிக்காத மனிதன் சர்ச்சை.. பஞ்சாயத்தை தீர்த்து வைத்த "நாட்டாமை" - விஜய் மில்டன் ஹாப்பி அண்ணாச்சி!
Vijay Milton : பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள, விஜய் மில்டனின் "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படம் கடந்த சில நாட்களாகவே சர்ச்சைக்கு உள்ளாகி வந்தது அனைவரும் அறிந்ததே.
vijay milton
"பிரியமுடன்", "நெஞ்சினிலே", "ஹலோ", "ஆட்டோகிராப்" மற்றும் "தீபாவளி" போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை பெற்ற திரை கலைஞர் தான் விஜய் மில்டன். கடந்த 2014ம் ஆண்டு வெளியான "கோலி சோடா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கினார்.
mazhai pidikatha manithan
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார் விஜய் மில்டன். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார், சத்யராஜ் மற்றும் நடிகை மேஹா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
Vijay Antony
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த விஜய் மில்டன், உடனடியாக ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், படத்தின் பல சுவாரசியமான திருப்பங்களை படம ஆரம்பித்த முதல் 2 நிமிடத்திலேயே கூறிவிடும் வண்ணம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த 2 நிமிட காட்சி என்னுடைய அனுமதி இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார். கடந்த சில நாட்களாகவே இது சர்ச்சையாக வெடித்த நிலையில், இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று தெளிவுபடுத்தினார் விஜய் ஆண்டனி.
Milton
அதனைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி வெளியிட்ட அந்த அறிக்கைக்கு நன்றி கூறியுள்ள விஜய் மில்டன், தங்களது உறவு மிகவும் நெருக்கமானது, ஆகையால் இந்த விஷயத்தில் எனக்கு உதவியதற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும் தனக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனையை தலையிட்டு தீர்த்து வைத்த, நடிகர் சரத்குமாருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து, இனி அந்த 2 நிமிட காட்சி நீக்கப்பட்டு படம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.