தினமும் உப்பு அதிகமாக சாப்பிடும் நபரா? இதனால் உடம்புக்கு என்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?
Salt Side Effects : உப்பு இல்லாமல் உணவின் சுவையை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால், அதிக உப்பு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி விரிவாக இங்கு அறிந்து கொள்ளலாம்.
'உப்பில்லாத உணவு குப்பைக்கு சமம்' என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான், உப்பு இல்லாமல் எந்த ஒரு உணவின் சுவையும் முழுமை அடையாது. அதே நேரத்தில் அதை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே உணவுக்கு சுவை கொடுக்கும்.
ஆனால், பலருக்கு உணவில் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் உண்டு. இப்படி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா? உப்பை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டால், உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அது என்னவென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் உப்பை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் என்ன நடக்கும்? : உப்பை தினமும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர, வயிற்றுப்புண், இதய சுவரில் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் பிரச்சனை போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
இதையும் படிங்க: கல் உப்பை வீட்டில் 'இந்த' இடத்தில் வச்சு பாருங்க.. பணம் அதிகம் சேரும்..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!
உங்களுக்கு தெரியுமா.. இரத்தத்தில் உப்பு சத்து அதிகரிக்கும்போது, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். உப்பு ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மற்றும் கால்சியம் சத்தை உறிஞ்சி விடும். தினமும் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால் இரத்த நாளத்தில் உட்புறம் கொழுப்பு அமையும் அது போல, உடல் பருமன், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிகளவு உப்பு எடுத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் பிரச்சனையே மேலும் அதிகப்படுத்தும்..
இதையும் படிங்க: காலையில் சூடான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடிப்பது உண்மையில் நல்லதா..? தெரிஞ்சுக்கலாம் வாங்க..
ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்?: ஒரு நாளைக்கு நாம் 2.3 கிராம் அல்லது 5 கிராம் வரை உப்பை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதுபோல துரித உணவுகளில் உப்பு அதிகமாக இருப்பதால் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர், சாண்ட்விச், சிப்ஸ், சீஸ் போன்ற நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகவே இருக்கிறது. எனவே, இதை நீங்கள் குறைவான அளவிலேயே சாப்பிடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D