தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும் இசக்கி... அண்ணா சீரியலில் எதிர்பாரா டுவிஸ்ட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பிளான் போட்டு பாக்கியாவின் மனதை மாற்றி இசக்கியை வீட்டிற்கு அழைத்து வர அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna Serial
அதாவது, பாக்கியா இசக்கியை அனுப்ப சொல்ல வைகுண்டம் மறுப்பு தெரிவிக்கிறார், அதுமட்டுமின்றி இசக்கியும் நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன், அப்படியே வந்தாலும் உன் பையனுக்கு விஷத்தை வச்சி கொன்னுடுவேன் என்று சொல்ல பாக்கியா மனவருத்தத்துடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.
இதையும் படியுங்கள்... பாக்கியலட்சுமியால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு அடித்த ஜாக்பாட்! TRP-ல் சன் டிவிக்கு செம டஃப் கொடுக்கும் விஜய் டிவி
Anna Serial Update
அதன் பிறகு இரவு எல்லாரும் தூங்கியதும் என்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் நான் உயிரோடவே இருக்க கூடாது என்று வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறாள். மறுநாள் காலையில் ரத்னா காபி கொண்டு போக இசக்கி ஆள் இல்லாமல் இருக்க பதறுகிறாள். மறுபக்கம் இசக்கி எங்கோ தனியாக நடந்து சென்று கொண்டிருக்க ரமேஷ் என்பவர் அதை பார்த்து சந்தேகம் அடைகிறார்.
Anna serial Today Episode
இந்த பொண்ணு தனியா எங்க போகுனு தெரியலையே என்று ஷண்முகத்திற்கு தகவல் கொடுக்க போன் செய்ய அவரது போனில் பேலன்ஸ் இல்லை என தெரிய வருகிறது. இசக்கி தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருக்க அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... எங்கள் நோக்கம் லாபம் இல்லை! இலவச மெட்ரோ வசதியுடன்.. சந்தோஷ் நாராயணன் நடத்தும் ‘நீயே ஒளி' இசை நிகழ்ச்சி!