Amala Paul Baby Bump: அதற்குள் வயிறு இவ்வளவு பெருசா ஆகிடுச்சா? பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!
நடிகை அமலா பால் தற்போது தன்னுடைய கர்ப்ப காலத்தை ரசித்து, அனுபவித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது பேபி பம்ப் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். எனினும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். கணவரை விட்டு அமலா பால் பிரிந்த பின்னர், இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால்... ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவ்வப்போது சில படங்களில் நடித்து வரும் அமலாபால், மலையாளத்தில் ப்ரிதிவிராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் முதல் கணவரை விவாகரத்து செய்து 5 வருடங்கள் கழித்து, தன்னுடைய நண்பர் ஜகத் தேசாய் என்பவரின் காதலை ஏற்று கொண்டு, ஒரே வாரத்தில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.
திருமணம் ஆன ஒரே மாதத்தில், கர்ப்பமாக இருக்கும் தகவலை அமலா பால் வெளியிட்டார். அதாவது திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்ததால் தான், அமலா பால் - தேசாய் திருமணம் அவசர அவரசமாக நடந்து முடிந்ததாக கூறப்பட்டது.
இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய கர்ப்ப காலங்களை அனுஅனுவாக ரசித்து வரும் அமலா பால், அவ்வப்போது, மெடிடேஷன் மற்றும் கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது கடற்கரை பகுதியில் நின்றபடி... வெள்ளை நிற மேக்சி உடையில், தன்னுடைய பேபி பம்பை காட்டும் சில புகைப்படங்களையும், கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் அதற்குள் வயிறு இவ்வளவு பெருசா ஆகி விட்டதா என்றும், உங்களுக்கு எத்தனை மாதங்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.