மன நிம்மதியை தேடி சுவாமி தரிசனம்.. தனிமையில் அமர்ந்திருக்கும் தனுஷ்!
Actor Dhanush : தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ராயன். இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளது.
pa pandi
பா பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் களமிறங்கிய தனுஷ், தற்பொழுது இரண்டாவது முறையாக ஒரு திரைப்படத்தை இயக்கிய வெளியிட உள்ளார். "ராயன்" என்கின்ற அந்த திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கங்குலியோடு காதல் வயப்பட்டேனா? மனம் திறந்த நடிகை நக்மா - ஒரு Flashback!
rahuman
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் அவருடைய 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.
rahuman movie
பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சரவணன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Dhanush
இன்னும் சில நாட்களில் ராயன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான பிரமோஷன் பணிகளில் தனுஷ் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கோவிலுக்கு சென்று தனிமையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் தனுஷ். அந்த புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது
சூரியின் கொட்டுக்காளி பட ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு! சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்!