கங்குலியோடு காதல் வயப்பட்டேனா? மனம் திறந்த நடிகை நக்மா - ஒரு Flashback!
Actress Nagma : பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியோடு, கிசுகிசுக்கப்பட்ட, நடிகை நக்மா அந்த விஷயம் குறித்து பகிர்ந்து கொண்ட சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

virat
கிரிக்கெட் வீரர்கள் மீது நடிகைகள் காதல்கொள்வது புதிதல்ல, அந்த காலம் தொடங்கி இப்போது வரை பல முன்னணி கிரிக்கெட் வீரர்களை, முன்னணி நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு விராட் கோலி, அனுஷ்கா ஜோடி ஒரு சரியான எடுத்துக்காட்டு.
சூரியின் கொட்டுக்காளி பட ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு! சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்!
ganguly marriage
ஆனால் இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில், அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட இரு நபர்கள் என்றால், அது "Bengal Tiger" கங்குலி மற்றும் நடிகை நக்மா ஆகிய இருவரும் தான். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு. கடந்த 1999ம் ஆண்டு, நக்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சர்ச்சை வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1997ம் ஆண்டே தனது காதலி டோனாவை மணம்முடித்திருந்தார் கங்குலி.
Actress nagma
இருப்பினும் நடிகை நக்மாவும், கங்குலியும் ரகசிய திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அவர்கள் பலமுறை கோவில்களில் ஒன்றாக தென்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. பின் ஒரு கட்டத்தில் டோனா கங்குலி, கங்குலியை விரைவில் விவாகரத்து செய்வார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நக்மா பேட்டி அளித்தார்.
Actress nagma and Ganguly
அந்த பேட்டியில் பேசிய நடிகை நக்மா "ஒரு விஷயத்தில் சம்பந்தப்பட்ட இருவரும், எதுவுமே பேசவில்லை என்றால், அதைப் பற்றி நாம் எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். அப்படி ஒரு விஷயம் தான் இப்பொழுது நடந்து வருகிறது" என்றார். இறுதிவரை கங்குலியின் பெயரை பயன்படுத்தாமலேயே பல விஷயங்களை அன்று பகிர்ந்து கொண்டார் நக்மா.
politician nagma
"நீங்கள் நினைக்கும் விஷயம் எங்களுக்குள் நடந்திருக்கலாம், ஆனால் கிரிக்கெட் மீது எனக்கு ஆர்வம் குறைவாக இருந்தது பல விஷயங்கள் தவறாக முடிய காரணமாக இருந்தது. எங்களுக்குள் சில விஷயங்கள் சரிபட நடக்கவில்லை, அதனால் மேற்கொண்டு அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை, என்று கூறி தனக்கும், கங்குலிக்கும் இருக்கும் உறவு குறித்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
nagma birthday wish
1990ம் ஆண்டு முதல் திரை உலகில் பயணித்து வரும் நக்மாவிற்கு வயது 49, இப்போது வரை அவர் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் உள்ள நக்மா, கடந்த 2020ம் ஆண்டு கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த ட்வீட் இன்று வரை அழிக்கப்படாமலே உள்ளது.
தளபதியின் GOAT படத்தில் இணைந்த "வாரிசு நடிகை?" விரைவில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!