மீண்டும் தடை.! பொங்கி வரும் காவிரி- கிடு கிடுவென உயரும் நீர் மட்டம்- மேட்டூர் அணை நீர் வரத்து என்ன தெரியுமா.?
கர்நாடகா நீர் பிடிப்பபு பகுதியில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரும் காவிரியும்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையாக இருப்பது காவிரி ஆறு, ஆற்றில் தண்ணீர் வந்தால் விவசாயமும் செழிக்கும். அந்த வகையில் கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மழையில் உருவாகும் காவிரி பல மாவட்டங்களை கடந்து தமிழக எல்லையை வந்தடைகிறது.
பொங்கி வரும் காவிரியை தேக்கி வைக்கும் பொக்கிஷமாக மேட்டூர் அணை உள்ளது. இந்த மேட்டூர் அணையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உரிய நீர் இல்லாத காரணத்தால் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் தான் கர்நாடகவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகள் அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டியது.
குறைந்தது நீர் வரத்து
இதனால் தமிழகத்திற்கு 2 லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது. 2 லட்சம் கன அடியில் இருந்து 8ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
மீண்டும் அதிகரித்த நீர் வரத்து
இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல்லில் தடை விதிக்கப்பட்ட பரிசல் சவாரி மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் 8ஆயிரம் கன அடியில் இருந்து 24ஆயிரம் கன அடியாக உயர்ந்த தண்ணீர் அளவு தற்போது 30ஆயிரம் கன அடி அளவிற்கு ஒகேனக்கல்லிற்கு நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் அருவிகளில் குளிக்க 27வது நாளாக தடை தொடர்கிறது.
Mettur Dam
மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை
இந்தநிலையில் மீண்டும் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் 8ஆயிரம் கன அடியில் இருந்து 24ஆயிரம் கன அடியாக உயர்ந்த தண்ணீர் அளவு தற்போது 30ஆயிரம் கன அடி அளவிற்கு ஒகேனக்கல்லிற்கு நீர் வந்து கொண்டுள்ளது. இதானல் அருவிகளில் குளிக்க 27வது நாளாக தடை தொடர்கிறது.
இதனிடையே மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. தற்போது 93.47 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.