vegetables : மீண்டும் குறைந்ததா தக்காளி விலை.! கோயம்பேட்டில் பீட்ரூட், கேரட், வெங்காயம் விலை நிலவரம் என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலையானநு தற்போது சரிந்துள்ளது.
Vegetables Price Today
வெங்காயம், தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetables
சுரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரட் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஞ்சி விலை நிலவரம் என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20-க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனைசெய்யப்படுகிறது.