முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் சீதா ராமம் நாயகி மிருணாள் தாக்கூர்... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ் இதோ
சீதா ராமம் படத்தில் பாரம்பரிய உடையணிந்து நடித்து அசத்திய நடிகை மிருணாள் தாக்கூரின் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.
மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயரையும் அடையாளத்தையும் கொடுத்தது தென்னிந்திய சினிமா தான்.
கடந்தாண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மிருணாள் தாக்கூர்.
இப்படத்தில் அவர் நடித்திருந்த சீதா மகாலட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததோடு மட்டுமின்றி அவரின் அடையாளமாகவும் மாறியது.
சீதா ராமம் படம் முழுக்க சேலையில் பக்கா குடும்பத்து பெண்ணாக நடித்திருந்த மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராமை திறந்து பார்த்தால் இவரா அப்படி நடித்தார் என கேட்க தோன்றும்.
இதையும் படியுங்கள்... ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு அறிவிப்பு... இது 40 வருஷத்துக்கு முன் ரஜினி படத்துக்கு வச்ச பெயராச்சே..!
அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சி ராணியாக மிரட்டி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது அட்டைப் படம் ஒன்றிற்காக மிருணாள் தாக்கூர் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
வித்தியாசமான மாடர்ன் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்தபடி நடிகை மிருணாள் தாக்கூர் நடத்தியுள்ள அந்த போட்டோஷூட் தான் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை டிரெண்டிங் ஆக உள்ளது.
கவர்ச்சி வேடங்களிலும் தான் நடிக்கத் தயார் என்பதை தெரிவித்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை தட்டிதூக்கவே மிருணாள் தாக்கூர் இப்படி போட்டோஷூட் நடத்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... கமலுக்காக சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன்... ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெறித்தனமான ரசிகரா இருக்காரே!