ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் தூக்கலா கவர்ச்சி காட்டிய கீர்த்தி சுரேஷ்! செம்ம ஹாட் போட்டோஸ்!
தசரா படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் சேலையில் தூக்கலான கவர்ச்சி காட்டி நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தசரா என்கிற தெலுங்கு திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள தசரா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், வெண்ணிலா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தசரா படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷும் பங்கேற்று படத்தை தீவிரமாக புரமோட் செய்து வருகிறார்.
அந்த வகையில் தசரா படத்தின் தூம் தாம் கூத்து என்கிற பாடலின் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் நானி, கீர்த்தி சுரேஷ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோர் கலந்துகொண்டு அப்பாடலை வெளியிட்டனர்.
இதையும் படியுங்கள்... பத்து தல படத்தில் நடிக்க மறுத்த ரஜினி... கதை சூப்பராக இருந்தும் சூப்பர்ஸ்டார் ரிஜெக்ட் செய்தது ஏன்?
இப்பாடல் வெளியீட்டு விழாவின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் சரக்கு பாட்டில் ஒன்றை கொண்டுவந்து, அதனை அனைவர் முன்னிலையிலும் கல்பாக அடித்து ஷாக் கொடுத்தார். பின்னர் தான் அந்த சரக்கு பாட்டிலில் இருந்தது மது அல்ல குளிர்பானம் என தெரியவந்தது.
மும்பையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வெள்ளை நிற சேலையில் அழகு தேவதையாக வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது அதே உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
அதில் சேலையில் தூக்கலான கவர்ச்சி காட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. கீர்த்தி சுரேஷின் இந்த போட்டோஷூட் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமியா? நகை திருட்டில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரி விசாரணையில் கூறிய ஷாக்கிங் தகவல்!