ஓ சொல்றியா மாமா எஃபெக்ட்... கவர்ச்சியில் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் சாக்ஷி - கிக் ஏற்றும் கிளாமர் கிளிக்ஸ்
sakshi agarwal : புஷ்பா படத்தில் இடம்பெறும் ஓ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா அணிந்திருந்த கவர்ச்சி உடையை, தற்போது நடிகை சாக்ஷி அணிந்தபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் சாக்ஷி அகர்வால். இதில் கவினை காதலிப்பதாக கூறி இவர் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
சினிமாவை பொருத்தவரை அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் நடிகையாக அறிமுகமான சாக்ஷி, அடுத்ததாக ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அஜித், ரஜினி, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், நடிகை சாக்ஷியை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான சாக்ஷி, அதில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
டிரெடிஷனல் முதல் கண்ணைக்கட்டும் கிளாமர் உடைகள் வரை விதவிதமான ஆடைகள் அணிந்தபடி போஸ் கொடுத்து இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சில சமயங்களில் விமர்சனங்களையும் பெறுவதுண்டு.
அந்த வகையில், புஷ்பா படத்தில் இடம்பெறும் ஓ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா அணிந்திருந்த கவர்ச்சி உடையை, தற்போது நடிகை சாக்ஷி அணிந்தபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.
இதைப்பார்த்த ரசிகர்கள், சமந்தாவை போல் சாக்ஷிக்கும் இந்த உடை நச்சுனு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ, தானும் ஐட்டம் சாங்குக்கு ஆட ரெடி என்பதை உணர்த்தும் விதமாகத் தான் சாக்ஷி இவ்வாறு போட்டோக்களை பதிவிட்டு உள்ளதாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.
ஆனால் அவர் இந்த உடை அணிந்ததற்கு காரணம் என்ன வென்றால், அவர் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Nenjukku Needhi : அனல்பறக்கும் போஸ்டருடன் வந்த மாஸ் அப்டேட்... நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு