தினமும் லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து உல்லாசம்..?? கதவை உடைத்து உள்ளே சென்று அட்டூழியம்.. 3 பேர் கைது.
லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வந்ததுடன், பெண்களை அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார் வழக்கில் மூன்று இளைஞர்களை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வந்ததுடன், பெண்களை அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார் வழக்கில் மூன்று இளைஞர்களை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை சார்பில் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு சாலிகிராமம் காந்தி நகர் கலைஞர் கருணாநிதி தெருவில் லேடீஸ் ஹாஸ்டல், கடந்த 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்டது . பின்னர் அது பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது, ஆனால் சில காரணங்களால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அந்த வளாகம் செயல்படாமல் இருந்து வருகிறது, வளாகத்தைச் சுற்றி காலி மைதானம் உள்ள நிலையில், கைவிடப்பட்ட இந்த கட்டிடம் நாளடைவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.
இதையும் படியுங்கள்: 40 வயதில் கள்ளக்காதல் தேவையா? உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட பெண்.. எப்படி தெரியுமா?
மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சமூக விரோதிகள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து குடிப்பது, பெண்களை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபடுவது, கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறியது. ஆனால் கருணாநிதி தெருவில் வசிக்கும் மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், இதனையடுத்து சமூகநலத்துறை அதிகாரி மங்கையர்க்கரசி, திடீரென அதிகாரிகளுடன் மகளிர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படியுங்கள்: கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கு.. பாயிண்டை பிடித்த குற்றவாளி தரப்பு.. விடுதலைக்கு இதுதான் காரணம்?
அப்போது உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த விடுதியில் இருந்த 93 சீலிங் ஃபேன், 30 மரக்கட்டில், 4 பாத்ரூம் பிளஸ் டேங்க், நாப்கின் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காணாமல் போயிருந்தது, இதையடுத்து மங்கையற்கரசி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்.
அதில், மகளிர் விடுதியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய வடபழனி மன்னார் முதல் தெருவைச் சார்ந்த சஞ்சய் குமார் மற்றும் வடபழனி ராஜாங்கம் தெருவை சேர்ந்த சுரேஷ் ராமு உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா புகைப்பதற்காக மகளிர் விடுதிக்கு சென்று அங்கிருந்த கதவை உடைத்து, கட்டிடத்திற்குள் இருந்த பொருட்களை சிறிது சிறிதாக தவணைமுறையில் அவர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தற்போது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.