சென்னையில் திருமணமான இளம்பெண்ணை சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவரது கணவர் தச்சு வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இந்நிலையில், தீபாவின் கணவர் தச்சு வேலை காரணமாக கடந்த ஜூலை மாதம் வெளியூர் சென்று இருந்தார். அப்போது, கணவரின் நண்பர் வீட்டிற்கு வந்து சாக்லெட் கொண்டு வந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இந்த இளம்பெண் சென்றுவிட்டார்.

இதையும் படிங்க;- மாணவிகளுக்கு உடலுறவு பற்றி புட்டு புட்டு வைத்த கணித ஆசிரியர்... அலேக்கா தூக்கி லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..!

இதனையடுத்து, ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் என்ற இருவரும் திருமணமான இளம்பெண்ணை மயக்க நிலையில் இருக்கும் போதே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அதை வீடியோவாக பதிவு செய்துகொண்டனர். அதன்பிறகு தீபா கண்விழித்து பார்த்த போது நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கழுத்தில் இருந்த 3 சவரன் நகையையும் எடுத்து சென்றுவிட்டனர். 

பின்னர், செல்போன் இருக்கும் வீடியோவை காட்டி அடிக்கடி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக தனது கணவரிடம் நடந்தவற்றை கதறியபடி கூறியுள்ளார். இதனையடுத்து, பெண்ணின் கணவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் வடபழனி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். 


இதையும் படிங்க;- எடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..? மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..!

இந்நிலையில், நெசப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் மகளிர் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.