ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவியிடம் செக்ஸ் பாடம் நடத்திய ஆசிரியர் சுரேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக சுரேஷ் (37) பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டியதுடன் பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். மேலும், ஜாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- ராதாபுரம் மறுஎண்ணிக்கை ரிசல்ட்... செல்லாத ஓட்டுக்களை எண்ணினால் தோற்றுவிடுவேன்... நீதிபதியிடம் கதறும் இன்பதுரை..!

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் கூறுகையில் நிர்வாண சிலைகளின் புகைப்படத்தை காட்டுவார். உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து கூறார். ஆபாசமாக அறுவருக்க தக்க வகையில் சில வார்த்தைகள் கூறுவார் என்று குற்றம்சாட்டினர். 

இதையும் படிங்க;- அதிமுகவில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆபத்து... பதவி பறிபோகும் பயத்தில் புலம்பும் ஓபிஎஸ்...?

இந்நிலையில், மாணவிகளின் புகாரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ஆசிரியர் சுரேஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் சுரேஷ் மீது புகார் அளித்தனர். புகாரை அடுத்து செக்ஸ் பாடம் நடத்திய சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.