நெருங்கிப் பழகிய பள்ளித் தோழியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது மாணவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

17-yr-old Intermediate student accused of raping his friend, a minor, in Nalgonda

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 வயது சிறுமியை அவரது நண்பரான 17 வயது மாணவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், அந்த மாணவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியை பரோசா மையத்திற்கு அனுப்பி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி நல்கொண்டா மாவட்டத்தின் படவூரா மண்டலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் சமீபத்தில் தான் பத்தாம் வகுப்பை முடித்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட 17 வயது மாணவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர். இடைநிலை முதலாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவர் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார். வெள்ளிக்கிழமை மாலை, சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த மாணவர் தனது நண்பர்கள் இருவருடன் அங்கு சென்றுள்ளார்.

உயிர் நண்பனின் மரணத்தைத் தாங்க முடியாமல் சிதையில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபர்!

17-yr-old Intermediate student accused of raping his friend, a minor, in Nalgonda

பின், அந்த மாணவர் அப்பாவி சிறுமியை கிராமத்திற்கு அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மாணவரின் வேறு நண்பர்கள் சிலர், சிறுமியிடம் அத்துமீறி நடக்கும் தங்கள் மாணவரைப் பார்த்து எச்சரிக்கை செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவரும் அவரது நண்பர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப் பற்றி விவரம் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் பெடவூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வாக்குமூலத்தையும் பதிவு செய்வதனர்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அதற்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் போலீசார் கூறுகின்றனர்.

(பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்க அவரது அடையாளத்தை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி பெயர்கள் குறிப்பிடப்படவில்லை)

தேர்வுகளில் ChatGPT பயன்படுத்தியதால் ஒரே விடையை எழுதி மாட்டிக்கொள்ளும் மாணவர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios