சிங்கப்பூரில் 21 வயதான நபர் ஒருவர், தனது 17 வயது காதலி, மற்றொரு ஆணுடன் செல்வதைக் கண்டு பொறாமையும், கோபமும் கொண்டு அந்த பெண்ணை பலமுறை அடித்து, அவர் தொடையில் ஸ்க்ரூடிரைவரால் குத்தி, இறுதியில் அவரை கொடூரமாக கற்பழித்து அதை வீடியோவும் எடுத்துள்ளார்.
(இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது)
நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் தற்போது ஏழு வயதில் ஒரு மகள் உள்ளனர். அந்த நபருக்கு சுமார் 15 வயதும், அந்த பெண்ணுக்கு சுமார் 12 வயதும் இருந்தபோதே அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளர் அவர், இதனையடுத்து அந்த பெண் 2015ம் ஆண்டு கர்ப்பமான நிலையில் அந்த நபரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அப்போது அந்த பெண்ணின் வயது 13.
தங்களுக்கு 18 வயது ஆனவுடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். இந்த சூழலில் தான் சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த ஜோடிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 17 வயது ஆனா நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே 19ம் தேதி அந்த நபரை பிடிக்காமல் அவருடைய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த நபர்.
அவர் வீட்டை விட்டு வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு, சரியாக ஜூலை 1, 2021 அன்று நள்ளிரவில், புக்கிட் பஞ்சாங்கில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில், அந்த நபர், அந்தப் பெண்ணை கண்டுள்ளார். அந்தப் பெண் வேறு ஒரு நபருடன் அந்த பூங்காவில் அமர்ந்திருப்பதை கண்டு மிகுந்த கோபமடைந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொண்டும், கைகளை பிடித்துக் கொண்டு நடந்ததும், அவரை இன்னும் அதிக அளவில் கோபம் ஆக்கியுள்ளது.
உக்ரைனைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ள முயற்சிக்கும் தைவான்; சீனாவை வெற்றி கொள்ளுமா?
இந்நிலையில் தான் சுமார் மூன்று மணி அளவில் அந்த பெண்ணை தாக்க அவர் அருகில் சென்றுள்ளார், உடனே அந்த பெண்ணுடன் இருந்த நபர் இதைக் கண்டு பயந்து அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளார். உடனே அந்த பெண்ணை தரையில் தள்ளி, அவர் முகத்தில் பலமுறை கொடூரமாக தாக்கியுள்ளார் அந்த மாஜி காதலன். பிறகு அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு அவரை தரதரவனை இழுத்துச் சென்று, அங்கிருந்து அவரை தள்ளிவிடப் போவதாக மிரட்டி உள்ளார்.
மேலும் அந்த பெண்ணினுடைய மொபைல் பாஸ்வேர்டை கேட்டு அவரை பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, இறுதியில் தனது காருக்கு அழைத்துச் சென்று, காருக்குள் ஏறுமாறு அவரை வலியுறுத்தியுள்ளார். பயந்த அந்த பெண்ணும் காருக்குள் ஏறிய நிலையில், அவர் காரில் வைத்திருந்த ஒரு ஸ்க்ரூடிரைவரை கொண்டு அவர் தொடையில் பலமாக குத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அந்த பெண் தனது மொபைல் போனின் பாஸ்வேர்டை கொடுக்க, அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் சேட் செய்ததை படித்து, மேலும் அந்த மனிதன் கோபமடைந்துள்ளார். அந்த பெண்ணின் ஆடைகளை கழற்ற சொல்லி மிரட்டிய அந்த நபர், இறுதியில் அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து அதை வீடியோவும் எடுத்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த விஷயம் அந்த நபரின் சொந்தங்களுக்கு தெரிய வர, அவரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அந்த ஆணுக்கு 12 ஆண்டுகள் சிறையும் ஆறு சவுக்கடி கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றிய வளர்ந்த நாடுகள்; இந்தியா எங்க இருக்குன்னு பாருங்க, கொண்டாடுங்க!!