health
தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு காணலாம்.
முலாம் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு முலாம்பழம் விதை ரொம்பவே நல்லது. இதை சாப்பிடுவதன் மூலம் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
முலாம்பழ விதையில் தேவையான அளவு புரதம் உள்ளதால், இதை நீங்கள் ஸ்மூதியில், சாலட் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
உடல் வீக்கத்தை குறைக்க முலாம்பழ விதைகளை தினமும் சாப்பிட வேண்டும். இது தவிர உடல் பருமனையும் குறைக்கும்.
முலாம் பழ விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்.