Jun 25, 2023, 12:55 PM IST
கோவை, பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மலை (15) திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை நவக்கரை பகுதியில் இருந்த பயிற்சியாளரிடம் விட தனது சக்கர வாகனத்தில் நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார். பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக வந்த ஜாகிர் உசேன் கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஜாகிர் உசேன் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இச்சம்பவத்தில் தூக்கிவீசப்பட்டதில் இரு சக்கர வாகனம் பின்னால் வந்த வேனில் முன்பகுதியில் கண்ணாடி உடைத்து கொண்டு சிக்கியது. வேனில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு
அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?