Oct 28, 2022, 4:28 PM IST
ஆரூர் அடுத்த புதனன்கடியில் உள்ள ஸ்ரீ குமாரவிலாசம் கோவிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது. சாமியின் கருவறையை உடைத்து நுழைந்த திருடன், அங்கிருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளான்.
மேலும் படிக்க:வனத்துறையினரிடம் சிக்காமல் தண்ணீ காட்டி வந்த புலி 26 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்டது..
காலையில் கோவில் நடை திறக்க வந்த பூசாரி கருவறை கதவு திறந்திருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோவில் சோதனையிட்டர். பின்னர் கோவிலில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க:பேன்சி ஸ்டோரில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் - சிசிடிவி காட்சி
மேலும் இன்று காலை 1 மணி அளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் கோவிலில் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.