Sep 29, 2022, 12:15 PM IST
நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் நடித்துள்ள கதிர் கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் இன்று காலை நானே வருவேன் படத்தின் ரிலீஸை ஒட்டி தியேட்டர் முன் வைக்கப்பட்டு இருந்த பேனருக்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களின் இந்த செயலுக்கு கண்டனக்குரல்களும் எழுந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... தனுஷின் நானே வருவேன் மிரட்டலா? சொதப்பலா? கம்பேக் கொடுத்தாரா செல்வராகவன்? - விமர்சனம் இதோ