ELECTION ; தமிழகத்தில் 40.05% வாக்குப்பதிவு.!! வாக்களிக்க விரும்பாத சென்னை வாக்காளர்கள்- காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Apr 19, 2024, 2:46 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் மதியம் 1 மணியளவில் தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்கு சதவிகிதம் மிகவும் குறைந்துள்ளது.
 


வாக்கு சதவிகிதம் என்ன.?

நாடாளுமன்ற தேர்தல் இன்று தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் வாக்கப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 6 கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில்  வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் 44,800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் பாதுகாப்பு பணிக்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

இந்தநிலையில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதும் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் அடுத்தடுத்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதன் காரணமாக காலையில் வாக்குப்பதிவு 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியிருந்தது.

பாஜக நிர்வாகியிடம் இருந்து சிக்கிய பணம்...வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் இல்லை- வானதி புது விளக்கம்

வாக்களிக்க விரும்பாத சென்னைவாசிகள்

இதனையடுத்து காலை 11 மணியளவில், 24.37% வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆரம்பத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமோடு வாக்களித்து வருகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் உள்ள மத்திய சென்னை, வட சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 40.05 % வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக தரும்புரியில் 44.08 சதவிகிதமும், கள்ளக்குறிச்சியில் 44% பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மத்திய சென்னையில் -32.31 சதவிகிதமும், தென் சென்னையில் 33.93 சதவிகிதமும், வட சென்னையில் 35.09 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

வாக்கு சதவிகிதம் குறைவுக்கு காரணம் என்ன.?

வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் சென்னையில் தொடர்ந்து வாக்கு சதவிகிதம் குறைவாகவே பதிவாகி வருகிறது. இதற்கு முதல் காரணமாக வெயில் தாக்கம் என கூறப்படுகிறது. அடுத்ததாக சென்னையில் பெரும்பாலான மக்கள் வெளியூரை சேர்ந்தவர்கள், தற்போது பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் வாக்கு சதவிகிதிம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாக்களிக்க மக்கள் விரும்பாத்தையே காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

DMK : கோவையில் திமுகவினருக்கும் காவல்துறைக்கும் மோதல்.. குண்டுக்கட்டாக பகுதி செயலாளரை தூக்கி எறிந்த போலீஸார்

click me!