திமுக வெற்றி பெற்றால் 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்காது.. தோல்வி அடைந்தால் மட்டுமே கிடைக்கும்- வானதி சீனிவாசன்

By Ajmal Khan  |  First Published Apr 17, 2024, 2:58 PM IST

மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


மகளிர் உரிமை தொகை

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. பிரதமர் மோடி 8 முறை பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ளார். இந்தநிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி 2 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டது.

திமுக வெற்றி பெற்றால் கிடைக்காது

இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இரண்டு கோடி பேருக்கும் உரிமை தொகை எப்போதுமே கிடைக்காது. மாறாக இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். எனவே தமிழ்நாட்டு வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவிற்கு 10 ஓட்டுகள் கூட விழாது... தேர்தலில் நாடகம் போடும் எடப்பாடி- உதயநிதி

click me!