Tamilnadu corona : தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டாமல், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
undefined
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 306 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.
செங்கல்பட்டில் 122 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 19 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 3,522 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : 90 சதவீதம் ஓகே.. நீங்க முரண்டு பிடிக்காதீங்க ஓபிஎஸ்.! எடப்பாடிக்கு ஆதரவாக குதித்த ராஜன் செல்லப்பா