FACT CHECK சேலத்தில் குழந்தைகளை கடத்த வந்துள்ள 400 வெளிநாட்டவர்கள்: உண்மை என்ன?

By Manikanda Prabu  |  First Published Mar 1, 2024, 4:23 PM IST

சேலத்தில் குழந்தைகளை கடத்த வெளிநாட்டவர்கள் 400 பேர் வந்துள்ளதாக போலியான தகவல் பரவி வருகிறது


வெளிநாட்டில் இருந்து 400 பேர் சேலத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்கள் குழந்தைகளைக் கடத்திச் செல்வதாகவும் சமூக வலைதளங்களில் காணொலிஒன்று வைரலாகி வருகிறது. அதில், “திடீரென்று 400 பேர் வெளிநாட்டில் இருந்து சேலத்தில் இறங்கி உள்ளனர். அவர்கள் 5 முதல் 10 வயதுடைய குழந்தைகளையும், பெண்களையும் கடத்தி வருகின்றனர். அவர்கள் பெண் வேடமிட்டு குழந்தைகளை கடத்துகின்றனர். எனவே, குழந்தைகளை வெளியே விடாதீர்கள்.” என கூறப்பட்டுள்ளது.

அந்த காணொலியில், பொதுமக்கள் ஒருவரை பிடித்து அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குழந்தையை கடத்தியபோது பிடி பட்டவர்தான் அவர் எனவும், அவரை பொதுமக்கள் தாக்குகிறார்கள் எனவும் அதில் கூறப்படுகிறது. இது உண்மை என்று நம்பி பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழக மக்கள் ஏன் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்? நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கேள்வி!

இந்த நிலையில், சேலத்தில் குழந்தைகளை கடத்த வெளிநாட்டவர்கள் 400 பேர் வந்துள்ளதாக பரவு வரும் தகவல் போலியானது என தெரியவந்துள்ளது. மேலும், போலியான இந்த தகவல் பல ஆண்டுகளாக பரவி வருவதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேடியபோது, அந்த காணொலியில் இருக்கும் வீடியோ 2019ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் என தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் சரமரியாக தாக்கியுள்ளனர். அந்த வீடியோவுடன், சேலத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள 400 பேர் குழந்தைகளை கடத்துவதாக இணைத்து போலியான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

 

‘சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் குழந்தையைக் கடத்தி செல்லும்போது பிடிபட்டார்’ என்று பரப்பப்படும் காணொளி முற்றிலும் வதந்தி. பொதுமக்கள் இதுபோன்ற காணொளிகளை நம்பி பதற்றமடைய வேண்டாம். வதந்தியைப் பரப்புவது குற்றச் செயல் ஆகும். pic.twitter.com/pV7MIjozW2

— TN Fact Check (@tn_factcheck)

 

இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவும் விளக்கம் அளித்துள்ளது. “சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் குழந்தையைக் கடத்தி செல்லும்போது பிடிபட்டார்’ என்று பரப்பப்படும் காணொளி முற்றிலும் வதந்தி. பொதுமக்கள் இதுபோன்ற காணொளிகளை நம்பி பதற்றமடைய வேண்டாம். வதந்தியைப்  பரப்புவது குற்றச் செயல் ஆகும்.” என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

click me!