NEET : நீட் தேர்வு சட்ட திருத்தம்.. அதிமுக ஆட்சி கால ரிட் மனுவை வாபஸ் வாங்கிய தமிழக அரசு - என்ன நடந்தது.?

By Raghupati R  |  First Published Feb 24, 2023, 4:48 PM IST

நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.


நீட் தேர்வில் இருந்து விலக்கு தர கோரியும் நீட் தேர்வுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. பிறகு அமைந்த திமுக ஆட்சியில் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாய்தா கேட்டிருந்தது. இந்த வாய்தா கேட்டதாலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்த மனு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இளங்கலை மருத்துவ படிப்புக்கான மசோதா ஆளுநருக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் பரிசீலனை இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த ரீட் மனு மீதான விசாரணை அடுத்த 6 மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நீங்கள் எப்படி ரிட் மனுவை தாக்கல் செய்தீர்கள் ? இந்த யோசனையை அளித்தது யார் ? என்று கேட்டனர். அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்த ரிட் மனுவானது கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

எந்த ஆட்சியில் இருந்தாலும் இந்த ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதால், இதுபோன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று பதில் அளித்தார்.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், பழைய ரிட் மனுவை நாங்கள் திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென்று கூறினார். நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்தை எதிர்த்த ரிட் மனுவை திரும்ப பெற அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இதையும் படிங்க..ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்

click me!