ஒரு முட்டை 5 ரூபாய் 75 காசு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத விலை உயர்வு கண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ஒரு முட்டை 5 ரூபாய் 75 காசு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதை ஒட்டி முட்டைக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வட மாநிலங்களிலும் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது அதிகமாகியுள்ளதும் முட்டை கொள்முதல் விலை உயர காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் பயனர்களால் அதிகமாக டெலிட் செய்யப்பட்ட 2 மொபைல் ஆப்ஸ்!