பிரதமர் மோடி வருகை: பிரதமர் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி!

By Manikanda Prabu  |  First Published May 29, 2024, 2:01 PM IST

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி (நாளை) கன்னியாகுமரி வரவுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  5 அடுக்கு பாதுகாப்புடன் 3 ஆயிரம் போலீசார் இன்று மாலை முதல்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாா், மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையிலான போலீஸாரும் விவேகானந்தா் மண்டபம், பூம்புகாா் படகுத்துறை, அரசு விருந்தினா் மாளிகை வளாகம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் விவேகானந்த கேந்திரத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டனர். ஹெலிகாப்டா் ஒத்திகையும் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி முழுவதும் உள்ள ஹோட்டல்களில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குவங்க இளைஞர்களின் வாய்ப்புகளை பறிக்கும் ஊடுருவல்காரர்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தனிமையில் தியானம் செய்யவுள்ளதால், பூம்புகார் சுற்றுலா படகு குழாம் முழுவதுமாக பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளது. மேலும், குமரி கடல் பகுதியில் கடற்படையினர்  பாதுகாப்பு ரோந்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் பிரசாரங்களின் முடிவிலும் பிரதமர் மோடி ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார முடிவின்போது, அவர் கேதார்நாத்திற்குச் சென்றிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார முடிவின்போது, சிவாஜியின் பிரதாப்கரை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக, 2024 மக்களவைத் தேர்தல் பிரசார முடிவின்போது கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, விவேகாந்தனர் பாறைக்கு சென்று, விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை வரை இரவு பகலாக தியானம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!