நாய் கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை வந்துருச்சி.. இந்த வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் தான் காரணம் -ஆர்.எஸ்.பாரதி

By Ajmal Khan  |  First Published Jul 3, 2024, 3:18 PM IST

கம்யூனல் அரசாணை வந்த பிறகுதான் பல பேர் டாக்டராக முடிந்தது என தெரிவித்த ஆர்.எஸ். பாரதி இப்போது ஊரில் எல்லாரும் பட்டம் படிக்கிறார்கள் நாய் கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை வந்துருச்சி. இந்த வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் தான் காரணம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வு - திமுக போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர்கள் அணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா இருந்த வரையும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. இடையில் வந்தவர்களால் தான் நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டு விட்டார்கள். நீட் தேர்வு ஊழலில் மத்திய அரசு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதன் காரணத்தினால் நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில்  விவாதிப்பதற்க்கு மோடி மறுத்து விட்டார். இதுவே திமுகவின் மாபெரும் வெற்றி என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

பயந்து ஓடும் மோடி

நீட் தேர்வு வருவதன் நோக்கமே நம்மை அழிக்க தான். நீட் தேர்வு ஒழுங்கா நடந்ததா, உலக மகா பிராடு தனம் நீட் தேர்வில் தான் நடத்து உள்ளதாக குற்றம்சாட்டினார். முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம் என கூறினார். எனவே நம் குரலை கேட்கும் இடத்திற்கு ஒன்றிய அரசு வந்துவிட்டது. ராகுல்காந்தி நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நரேந்திர மோடி பயந்து ஓடிவிட்டார்.

நாய் கூட பிஏ பட்டம் வாங்கும் நிலை

நான் ஒரு வக்கீல் B.L படித்தவன், எழிலரசன் BE, BL இதெல்லாம் குலத்தினாலோ கோத்திரத்தினாலோ வரவில்லை.திராவிட இயக்கம் போட்ட பிச்சை திராவிட இயக்கமும்,கம்யூனல் ஜி.ஓ.-வும் இல்லை என்றால் இத்தனை டாக்டர்கள் இத்தனை பி.இ பட்டம் பெற்றவர்கள் வந்திருக்க முடியாது. நான் பி.ஏ படித்த காலத்தில் ஊரில் ஒருவர் தான் பி.ஏ படித்திருப்பார்.

அப்போது பட்டத்தை வீட்டில் வெளியே பெயர் பலகையில் எழுதி வைப்பார்கள். இப்போது ஊரில் எல்லாரும் பட்டம் படிக்கிறார்கள் நாய் கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை வந்துருச்சி. இந்த வளர்ச்சிக்கு திராவிட இயக்கம்தான் காரணம். ஆனால் இதையெல்லாம் அளிப்பதற்காகவே நீட் தேர்வை கொண்டு வருகிறார்கள் அந்த நீட் தேர்வையும் குளறுபடிகள் மோசடிகள் செய்து தான் நடத்துகிறார்கள் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். 

Su Venkatesan : பாஜகவிற்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம்.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேஷன்

click me!