ஆகஸ்ட் 14இல் பள்ளிகளில் சர்க்கரைப் பொங்கல்! கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு!

By SG Balan  |  First Published Aug 9, 2023, 5:04 PM IST

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்  மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு போட்டிருக்கிறது.


கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்  மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பிறந்தநாளை நாடே வியக்கும் விதமாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கையில் மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடந்தது.

Tap to resize

Latest Videos

9 ஆண்டுகளில் 14.56 லட்சம் வாராக் கடன்கள் தள்ளுபடி செய்த வங்கிகள்! கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு பதில்

அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முதல்வர் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாட்களிலும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை உறுதி செய்ய தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி கோடை விடுமுறை என்பதால் முன்கூட்டியே ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ, மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட உள்ளது.

7.5 லட்சம் பேருக்கு ஒரே நம்பரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா முறைகேடு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்

click me!