10ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தமாக 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் வரிசையில் அரியலூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நாள்தோறும் ஓயாத சண்டை; தாயின் மூன்றாவது கணவனை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் - திருச்சியில் பரபரப்பு
undefined
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றி பெற்று மேல்நிலை வகுப்புகளை நோக்கி நம்பிக்கையோடு நகரும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மன உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் உடனடித் தேர்வுகளை தவறாமல் எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் நான் முதல்வன் போன்ற வழிகாட்டித் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் துறைகள் ஏராளமான வாய்ப்புகளுடன் உங்களுக்காக காத்திருக்கிறது. தேர்வு எழுதிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.